பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

37


பக்கம் திரும்பி, தென் அமெரிக்காவில் - பிரேசில், அமேசான் நதி கழிமுகத்தில் கி.மு. 150 ஆம் ஆண்டளவில் குடியமைப்புகளை நிறுவினார்கள்.

இதுவரை நாம் பார்த்த வரலாற்று விவரங்களை சற்றுக் கூர்ந்து நோக்கும் போது - என்ன முடிவு நமது நமது அறிவுக்கும் சிந்தனைக்கும் புலப்படுகின்றது என்றால், தமிழ்நாட்டின் நாகரிகம் கி.மு. 16 ஆம் நூற்றாண்டளவிலேயே உலகப் புகழின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்துள்ளது என்பதாகும்.

தமிழர்கள், கடல் மார்க்கமாக, நவரத்னங்கள், வாசனைப் பொருட்கள், சாய வகைகள், துணிவகைகள், உலோக வகைகள், விலங்குகள், பாணம், பாடினியர், விறலியர் போன்றவற்றை தமிழ் நாட்டின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களில் இருந்து ஏற்றிக்கொண்டு அலெக்சாந்திரியா துறைமுகத்துக்கு வாணிகம் செய்துள்ளார்கள். பிறகு, அங்கே இருந்து ரோம் நகரம், மற்ற முக்கிய பட்டினங்களிலும் வியாபாரம் நடத்தினார்கள் என்று வரலாற்று ஞானி ஹிராடெடஸ் கூறுகிறார்.

பினீசியர்களைப் பற்றி அவர் வியப்படைந்து கூறும்போது, பினீசியர்கள் இந்து மகா சமுத்திரம் பகுதியிலே இருந்தும், கேரளக் கடற்கரையிலே இருந்தும், மேற்கே கடல் மார்க்கங்கள் மூலமாகச் சென்று பல குடியேற்றங்களை அமைத்து வாழ்ந்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் ஹிராடெடஸ் கூறுகின்ற கேரளம் எது?

வால்மீகி கூறும் கேரள நாடு

வால்மீகி இயற்றிய இராமாயணம் நூலில், சோழ நாட்டையும், கேரளத்தோடு கூடிய பாண்டிய நாட்டையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் கேரளம், பாண்டிய நாட்டுடன் சேர்ந்தே இருந்திருக்கிறது. தமிழ் வரலாறும், சோழர், பாண்டியர், சேரர் என்கின்ற கேரளர்களையும் சேர்த்தே மூவேந்தர்கள் ஆண்ட