38
ஹிராடெடஸின்
நாடு என்று கூறுகிறது. அசோகர் கல்வெட்டும் சோழ பாண்டியர் நாடு என்றே சொல்கின்றது. எனவே, ஹிராடெடஸ் கூறுகிறபடி, கிரேக்க நாட்டில் ஒரு நாகரிகம், எகிப்து நாட்டில் ஒரு நாகரிகம், தமிழர் நாட்டில் ஒரு நாகரிகம், சீன நாட்டில் ஒரு நாகரிகம், இந்த நான்குக்கும் சம்பந்தமில்லாத வடநாட்டு ஆரியர் நாகரிகம் என்ற ஐந்த பெரும் உலக நாகரிகங்களுக்கு இடையே தமிழர் நாகரிகம் நடு நாயகமாய் நின்று; உலக நாகரிகத்தின் தொட்டிலாய் காட்சியளித்துக் கொண்டு - இன்று வரை அழியாமல் வளமோங்கி வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த நாகரிகம், கிரேக்க, எகிப்திய, சீன, நாகரிகங்களுக்குரிய ஓர் இணைப்புப் பாலமாய் இருந்து கொண்டிருந்தது எப்போது? கி.மு.3000 ஆம் ஆண்டளவில்!
ஆனால், வடநாட்டிலுள்ள சிந்து வெளி ஹரப்பா - மொகஞ்சதாரோ நாகரிகம், இன்று வரை அகழ்ந்தெடுத்தவரை - ஆராய்ச்சியாளர்கள் கூறும் கருத்து; கி.மு. 1500 ஆம் ஆண்டிலுள்ள தமிழர் நாகரிகம் அதாவது திராவிடர் நாகரிகம் என்று கூறிவருகின்றனர். இதன் முடிவு, மேலும் அதை அகழ அகழ, ஆராய்ச்சி செய்யச் செய்ய, காலம் மேலும் பழமையாகக் கூடும்.
எனவே, ஹிராடெடஸ் ‘வரலாறுகள்’ என்ற நூலின் கணிப்புப் படி பார்த்தாலும், “தென்னிந்தியாவிலிருந்த தமிழ்ப் பெரு மக்களது நாகரிகம், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் எல்லாம், கி.மு. 2500 ஆம் ஆண்டளவில் மேல் நாடுகளுக்கும், கீழ் நாடுகளுக்கும். கி.மு. 1500 ஆம் ஆண்டளவில் இந்தியாவிலே உள்ள சிந்து நதிக்கரை ஹரப்பா போன்ற இடங்களுக்கும் பரவிச் சென்றது என்பதற்குரிய வரலாற்றுக் குறிப்புக்கள் ஏராளமாக இருக்கின்றன.
வரலாற்று ஞானி ஹிராடெடஸ் மட்டுமன்று, பிளினி, பெரிப்ளுஸ், தாலமி, மெகஸ்தனிஸ், யுவான் சுவான், பாகியான், இத்சிங், மார்கபோலோ, அர்ரியன் இண்டிகா, அல்பெருனி போன்ற பல்நோக்குப் பூகோள, வரலாற்று, நாகரிக, இன ஆய்வு,