நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
39
மதஞானிகள் ஆகியோரது வரலாற்றுக் குறிப்புக்களில் ஹிராடெடஸ் கூறிய தமிழ் நாகரிகப் பண்பாடுகளின் வளரச்சிகளை அறிந்து; தமிழ் நாகரிகத்தின் அருமையை, பெருமையை நாம் உணர்கின்றோம்.
சிறிய நகரங்களின் வரலாறுகளை இனிக் காண்போம். இந்தச் சிறிய நகரங்கள் முன்பு பெரிய நகரங்களாக இருந்தன. பெரிய நகரங்களாக இருந்த பல, இப்போது சிறிய நகரங்கள் ஆகிவிட்டன. என்னுடைய காலத்தில் பெரியனவாக இருந்த நகரங்கள் - எப்படிச் சிறியனவாகச் சிதைந்தன? இனி சிறிய நகரங்களைப் பற்றியோ, பெரிய நகரங்களைப் பற்றியோ நான் கவலைப்பட்டு எழுதப் போவதில்லை. காரணம், இந்த உலகில் எவருமே நீண்ட நாட்கள் வளமாக வாழ்ந்தது இல்லை; கிடையாது.
காண்டெளல்ஸ், லிடியா என்ற நாட்டை ஆண்ட கடைசி மன்னர். அவர், ஹிராக்ளிடுகளின் பரம்பரையிலே வந்தவர். மெர்ம்னடே என்ற ஒரு சந்ததியில் பிறந்தவர் கைஸ் என்பவர். இவர் லடியவில் அவரது பரம்பரை ஆட்சி செய்தபோது முதல் அரசராக விளங்கியவர். டெல்பி நகரக் கோயிலுக்கு எவருமே அன்று வரை கொடுத்திராத அளவுக்கு அவர் ஏராளமாக வெகுமதிகளை வாரி வழங்கியவர். இவர் கி.மு.716 முதல் 678ஆம் ஆண்டு வரை அரசு புரிந்தார்.
காண்டெளஸ், தன்னுடைய மனைவி, அழகே மறுபிறவி எடுத்ததைப் போன்ற பேரழகி என்று தனக்குத் தானே எண்ணி மகிழ்ச்சியடைபவர். ஒரு நாள் - அவர் தனது மெய்ப் பாதுகாவலனாக உள்ள கைஸ் என்பவனை அழைத்து, தனது மனைவி பேரழகி என்றும், அது தனக்கும் தெரியும் என்றும், ஆனால், பிறர் அந்த அழகைப் பார்த்து ஒப்புக் கொண்டால்தான்