40
ஹிராடெடஸின்
உண்மையாக இருக்கும் என்று கூறி, தனது படுக்கை அறையில் நீ மறைந்து கொண்டு, எனது மனைவி அவளது ஆடைகளை அகற்றி நிர்வாணமாக இருக்கும் போது அவள் அழகைப் பார்த்து; அது எப்படிப்பட்டது என்று கூறு என்று தனது அந்தரங்கமான அந்த மெய்க்காப்பாளனுக்குக் கட்டளையிட்டான்.
“மன்னா, என்னதான் நான் தங்களது அந்தரங்கப் பணியாளனாக இருந்தாலும், இப்படி நீர் கட்டளை இடுவது தகுமா? நியாயமா? என்னை அதே குற்றத்தைச் சுமத்திக் கொன்று விட முடிவு கட்டி விட்டீரா?“ என்று பயந்து நடுநடுங்கிக் கேட்டான்.
‘மெய்க்காவலா, உன்னை அப்படியெல்லாம் சொல்லிக் கொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று, படுக்கை அறையில் நீ மறைந்திருப்பது அவளுக்கே தெரியக் கூடாது. ஜாக்கிரதையாக இரு எந்தப் பெண்ணும் தனது கணவனிடம்தான் நிர்வாணமாக இருப்பாள். பிறரைப் பார்க்க விடமாட்டாள், என்ன நடக்குமோ தெரியாது. மிகவும் எச்சரிக்கையோடு நான் உத்தரவிட்ட வேலையைச் செய்’ என்றான் அரசன்! பணியாளனும் சரியெனப் பணிந்தான்.
அடுத்த நாள், அரசனும் - ராணியும் படுக்கை அறையில் நுழைந்தார்கள். அவர்கள் நுழைந்ததும் ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு அப்பணியாள் கதவிடுக்கில் மறைந்து கொண்டான். ராணி, கணவனது விருப்பப்படி தனது எல்லா ஆடைகளையும் அகற்றி நிர்வாணமாக நின்றாள். மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து, காவலன் வெளியே செல்லக் கதவை ஓசை விழாமல் திறந்தான்.
இதை உடனே கவனித்துவிட்ட ராணி கணவனிடம் நெருங்கி, ‘இது உங்களது முன்னேற்பாடா? வெட்கமாக இல்லை உமக்கு?’ என்று கோபப்பட்டாள்.