பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

41



‘இப்போது என்ன நடந்து விட்டது. அவன் உன்னைத் தொட்டானா? பார்த்தான், அவ்வளவுதானே, அதற்குப் போய் நீ அலட்டிக் கொள்ளலாமா?’ என்றான் அரசன்.

‘ஒருவனது மனைவி உடலழகை நிர்வாண நிலையில், மற்றோர் ஆண்மகன் பார்ப்பது தவறாகப் படவில்லையா? இதுவரை எனது உடல் உன் ஒருவருக்கே உரிமையானது என்று எண்ணினேன். இப்போத வேறொருவனையும் சொந்தம் கொண்டாடச் செய்து விட்டீரே! நாளை மேலும் என்னென்ன செய்யச் சொல்வீரோ!’ என்று கோபமாக வெளியேறினாள் ராணி.

மறுநாள் ராணி, அந்த அந்தரங்க மெய்க் காவலனை அழைத்தாள்! அவன் ஒன்றும் அறியாதவன் போல அரசி எதிரே வந்து நின்றான்.

‘கைஜிஸ்; நேற்றிரவு என் உடலழகைப் பார்த்தீரா? நன்றாக ரசித்தீரா? அது எவ்வாறு இருந்தது?’

‘மகாராணி, தங்களது கணவர் கட்டளைப் படிதான் நடந்தேன். நானாக உங்களது அறைக்கு வரவில்லை. நான் நிரபராதி’ என்றான்.

‘போகட்டும், நான் உமக்கு இரண்டு கட்டளைகளை இடுகிறேன். ஒன்று, இதோ உள்ள வாளால் மன்னனைக் கொன்று பிணமாக்கு. என்னை உடனே உனது மனைவியாக்கிக் கொண்டு இந்த அரசிலே அமர்ந்து மன்னனாக ஆட்சி செய். இல்லையென்றால், அதே வாளால் உன்னையே நீ மாய்த்துக்கொள்.

‘ஏன் இந்த இரண்டு கட்டளைகளைப் போட்டேன் தெரியுமா? உமக்கு மனைவி இல்லாத என்னை, நிர்வாண நிலையில் நீ பார்த்தது தவறு; ரசித்தது அதைவிடப் பெரிய தவறு; என் உடல் எச்சில் பட்டு விட்டதா - இல்லையா? நீயே யோசனை செய்.”

ஒருவனுக்குச் சொந்தமில்லாத ஒரு பொருளை நீ சொந்தம் கொண்டாடலாமா? அது தவறல்லவா? அதனால், அதே