பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

ஹிராடெடஸின்


பொருளை நீ சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அல்லது, நீ சாகவேண்டும். நீ செத்தால், இந்தமன்னன், இதுபோல வேறொருவனை பழி செயலில் ஈடுபடுத்தும் இந்நிலை நின்றுவிடும். பயநிலை நிலைத்து நிற்கும். அப்படிச் செய்யும் புத்தி வரும்போதெல்லாம், உனது வாளால் நீ வெட்டுண்டு துடிதுடிக்கும் அம் மன்னனுக்கு நீதி புகட்டும்!”

“அதனால், ஒன்று நீ சாக வேண்டும் அல்லது மன்னன் சாகவேண்டும்! அப்போது தான், எனக்கு ஒரே ஒரு கணவர் இருக்க முடியும். என்ன கூறுகிறாய் கைஸ்?”

“மகாராணி, என்ன சொல்வது என்றே தெரியவில்லையே!” என்று தவித்தான். ஒரு நிமிடம் யோசித்தான்! முடிவும் செய்து விட்டான். என்ன அந்த முடிவு?

ஓடினான் கைஸ்! வேறோர்வாளை ஏந்தினான்! எந்த இடத்தில் ராணிக்குக் களங்கம் உண்டானதோ அதே இடத்தில், மறுநாள் அரசரைக் குத்திக் கொலை செய்தான்! மாண்டான் மன்னன் காண்டெளஸ்! சிம்மாசனத்தில் ஏறி கைஸ் அமர்ந்து கொண்டான்! கரும்பு தின்னக் கூலியா!

கைஸ் மன்னனாக அரியாசனத்தில் அமர்ந்தானள தவிர, அந்த நாட்டு மக்கள் அவனை அரசனாக மதிக்கவில்லை; ஏற்கவில்லை. மறுத்தார்கள். அப்போது டெல்பி கோயிலின் தேவதை அசரீரியாகி, கைஸ் மன்னனாகும் நியதி உள்ளவன் என்று குரல் எழுப்பியது. மக்களும் மறுபேச்சே இல்லாமல் அவனை அரசனாக ஒப்புக் கொண்டு விட்டார்கள்!

அசரீரி குரல் கேட்டு கைஜிசை அரசனாக ஏற்றுக் கொண்ட மக்கள், நேராக டெல்பி நகரிலே உள்ள கோயிலுக்குச் சென்று குறிகேட்டார்கள். அப்போது டெல்பி என்ற காளிதேவதை, மன்னனைக் கொன்று அரியணை ஏறிடும் கைஸ் பரம்பரையின் ஐந்தாம் பரம்பரை, இதே போல ஒரு கொலையைச் செய்து, அரசை