பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ஹிராடெடஸின்



கோயில் உணவுகளைக் கலந்து மக்களுக்கு வழங்குவதற்கான, பொன்னால் செய்யப்பட்ட பல பாத்திரங்களை அவன் வழங்கினான். அவற்றுள் ஆறு பொற்கிண்ணங்கள் மட்டும் 2500 பவுண்டு எடையுள்ளவை. இப்போது அவை கொரிந்தியரின் பொதுப் பண்டக சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. மைதாஸ் என்ற மன்னன் அக்கோயிலுக்குத் தனது தங்க அரியாசனத்தையே தானப் பொருளாகத் தந்தான்.

இவ்வளவு பெருமைக்கும் புகழுக்குமுரிய டெல்பி கோயிலின் வரலாறு என்ன? டெல்பி என்ற நகரம், கிரேக்க நாட்டிலே உள்ள போசிஸ் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற ஒரு ஊராகும். அப்போலோ என்ற தெய்வத்தின் அசரீரி, அங்கே பெரும் புகழ் பெற்றிருந்தது. பார்னசஸ் என்ற மலையின் சரிவில் அந்தக் கோயில் அமைத்திருந்தது.

அந்த மலைக் கோயிலின் முதல் பெயர் பைதோ என்பதாகும். கி.மு. 850 ஆம் ஆண்டில் வாழ்ந்த கிரேக்கக் கம்பர் என்ற புகழுக்குரிய ஹோமர் என்ற பெருங்கவிஞர், தான் எழுதிய ‘இலியட் ஒடிசி’ போன்ற உலகப் புகழ் வாய்ந்த காவியங்களுள், இக்கோயிலை டெல்பி என்ற பெயரிலே குறிப்பிட்டுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற தத்துவஞானி சாக்ரடீசின் விசாரணை முடிவதற்கு முன்பும் பின்புமாக சிறையிலே அவர் அடைக்கப்பட்டபோது, விசாரணை முடிந்து நச்சுக் கோப்பை ஏந்தி அதை அருந்தி சாக வேண்டும். என்ற தண்டனை வழங்கப்பட்ட பின்பு; அதை நிறைவேற்றாமல் சில நாட்கள் ஏதென்ஸ் அரசு தள்ளி வைத்ததற்கு இந்த டெல்பி கோயிலின் திருவிழாதான் காரணமாக இருந்தது.

பாதுகாப்பான ஒரு மலைச் சரிவில் கட்டப்பட்ட கோயில் என்பதால், கோயிலுக்குள் இருக்கும் பொன் பாத்திரங்கள், வெள்ளிக் கிண்ணங்கள், தங்க சிம்மாசனம் ஆகியவற்றைத் திருட