பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

47


இக்கருவி பிறகுதான் சென்று பரவியது என்றும், இசையிலே பெரும் புகழ் பெற்ற இந்த நாடு; பிறகு புகழ் உருகி, அறியாமை பெருகி, மடமையிலே மூழ்கிடும் நிலை உருவாகி, மடமையாளர் வாழும் நாடு என்ற இகழ்வான பெயரையும் பெற்றதாக, ஹிராடெடஸ் அந்நாட்டைப் பற்றி விவரிக்கின்றார்.

தொட்டதெல்லாம் பொன்னான கதை

பிரிஜியா நாட்டின் மன்னரான மைதாஸ் என்பவரைப் பற்றிக் கிரேக்க நாட்டில் தொட்டதெல்லாம் பொன்னான கதை! என்ற ஒரு நீதிக் கதை உள்ளது.

டயோனிசஸ் என்ற கடவுள், மைதாஸ் மன்னரிடம் ‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள், தருகிறேன்’ என்று கூறினார்; உடனே மைதாஸ், நான் தொட்ட தெல்லாம் பொன்னாக வேண்டும் என்று கேட்கவே, ‘சரி’ என்று டயோனிசஸ் தெய்வமும் சிரித்துக் கொண்டே வழங்கி விட்டது.

மன்னன் மைதாஸ் உடனே தமது மகளை அன்புடன் தொடவே, அவள் பொற்சிலை ஆகிவிட்டாள். அடுத்துப் பசிக்குப் புசிக்க உணவைத் தொட்டார்; அதுவும் பொன்னாக மாறிவிட்டது. பசிவாட்டிற்று; கோரமாக எடுத்தது தாகம். உடனே மன்னன் மீண்டும் டயோனிசஸ் என்ற கடவுளை வணங்கி தனது நிலையிலே இருந்து தப்பிக்க வழி செய்யுமாறு வேண்டினார். உடனே அந்தத் தெய்வம், திமோலஸ் மலையருகே உள்ள பெக்டோலஸ் ஆற்றிலே நீராடினால் பழையபடி வாழமுடியும் என்றார். அதே போல மன்னன் செய்து முன்பு இருந்த நிலையில் வாழ்ந்தார். தனது மகளையும் அதே நதியில் நீராட வைத்து மீண்டும் பழைய உருவத்தைப் பெறச் செய்தார்.

ஆனால், ஓர் அதிசயம் திடீரென்று நடந்தது; அந்த அரசன் எந்த ஆற்றில் நீராடினானோ, அந்த ஆற்று மணலெல்லாம் தங்கப் பொடிகளாக, மாறி விட்டது.