நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
49
பரவிவிட்டது. ரகசியமான இந்தச் செய்தி ஊர் மக்களுக்குத் தெரிந்து விட்டதால் மனமுடைந்த அரசன் அதைக் கேட்டு இறந்து போனான். இந்தக் கதை இன்றும் கிரேக்க நாட்டுப் புராணங்களில் ஒன்றாக உள்ளது - என்று Smaller classical Dictionary என்ற நூல் கூறுகிறது.
ஹிராடெடஸ் கூறியுள்ள இதுபோன்ற வரலாற்றுக் கதைகளை, அவருக்குப் பிறகு தோன்றிய நூலாசிரியர்கள் தங்களது நூல்களிலே மேற்கோள்களாகக் காட்டி எழுதியுள்ளார்கள்.
லிடியா நாட்டை ஆண்ட ஆர்டிஸ் என்பவர் கி.மு. 678 ஆம் ஆண்டு முதல் 629 ஆம் ஆண்டு வரை, ஏறக்குறைய 49 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவர், கைஜிஸ் என்ற மன்னரின் மகன் ஆவார். அவருக்குப் பிறகு ஸ்ட்யாட்டிசும், அவரது மகன் அல்யாட்டிசும் ஆட்சி புரிந்த பிறகு, அவர் மகன் குரோசஸ் என்பவர் அரசாண்டார்.
குரோசஸ் ஆட்சியின் கீழ் லிடியர், பிரிஜியர், மைசியர், மரியாண்டினியர், சாலிபியர், பாப்ல கோனியர், திரேசியர், காரியர், அயோனியர், டோரியர், இயோலியர், பாம்பிலியர் போன்ற பல நகர மக்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த நகரங்கள் எல்லாம் லிடியா நாட்டுப் பேரரசில் சேர்க்கப்பட்டிருந்தன.
குரோசஸ் ஆட்சியில் இவ்வாறு வெவ்வேறு இனமக்கள் ஆதிக்க அரசியலின் கீழ் பேரரசுக்கு உட்பட்டு வாழ்ந்த போதிலும் அரசியல் பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. அந்த நேரத்தில் தலைநகரமாக சார்டிஸ் இருந்தது. அது செல்வத்தின் செழிப்பிலே இருந்ததற்கு ஏற்ப, அதிகாரம் செய்வதிலும் உச்சக் கட்டத்தில் இருந்தது.