54
ஹிராடெடஸின்
உலகிலே மிகப் புகழ்பெற்ற சம்பவமாகத் திகழ்ந்தது. சட்ட மேதை சோவான் 80 வயதுவரை வாழ்ந்து, இறுதியாக ஏதென்ஸ் நகரத்திலே கி.மு.559-ம் ஆண்டில் காலமாகி மறைந்தார்.
உலகப் பெருங் கவிஞர்களுள் ஒருவரான ஹோமர் HOMER தனது ‘இல்லியட் ஒடிசி’ என்ற ஆதிக் காவியத்தில் ஹீரா என்ற பெண் தெய்வத்தை ஜியுஸ் என்ற ஆண் தெய்வத்தின் மனைவி என்று குறிப்பிடுகிறார். ஹோமர் காலம் கி.மு.850-ம் ஆண்டாகும். அக்காலக் கடவுட் கொள்கையை ஹிராடெடஸ் கூறும் போது, ஹீரா தேவதைக்குரிய திருக்கோயில்கள் சாமோஸ் தீவிலும், ஆர்க்கோஸ் தீவிலும், டெல்பி தேவதைக் கோயில் டெல்பி நகரில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
ஹீரா என்ற கிரேக்கப் பெண் தெய்வம், தமிழ் நாட்டிலே உள்ள துர்க்கை தெய்வம் போலவாகும்.
அதனைப் போலவே, இந்திய நாட்டின் வராக அவதாரம் கதையின் சாயலை நினைவுபடுத்தும் கதை ஒன்று, கிரேக்க நாட்டின் சார்டிஸ் நகரத்தில் கி.மு.859-ல் நடைபெற்றுள்ளது. அக் கதையை ஹிராடெடஸ் கூறுவதை அப்படியே கீழே தருக்கின்றோம்.
சோலான் சார்டிஸ் நகரை விட்டுப் புறப்பட்டதும், அன்றிரவு குரோசஸ் மகன் பன்றி ஒன்றினால் கொல்லப்படுவதாகக் கனவு கண்டான். அதற்குப் பிறகு, மன்னனின் மனம் குழப்பமடைந்தது. அடுத்த நாள் அந்தச் சிறுவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது, குழந்தைக்கு மேலே மாட்டப்பட்டிருந்த பன்றி வடிவப் பொம்மை உருவம் அந்தச் சிறுவன் மீது விழுந்து, மன்னன் கண்ட கனவிற்கேற்றவாறு அரசன் மகன் இறந்து போனான். மன்னன் கண்ட கனவு உண்மையாகி விட்டது.