பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

ஹிராடெடஸின்



ஊமை எவ்வாறு திடீரென்றுப் பேசினான் என்ற வியப்புணர்ச்சி ஏற்பட்டு, மகிழச்சி வெள்ளத்தைப் பாய்ச்சியது மக்களிடையே! தனது தந்தைக் குரோசசை, எங்கே கொன்று விடுவானோ என்று அவனது நெஞ்சும் நாவும் இதயமும் படபடத்து, அதிர்ச்சி நெருக்கடியின் அதிர்வுகளால் ஊமை பேசத் தொடங்கி விட்டான். இதற்கு அதிர்ச்சி சிகிச்சை என்று மருத்துவ உலகம் பெயரிடுகிறது.

குரோசசை இரும்புச் சங்கிலியால் இறுகப் பிணைத்துப் பாரசீக மன்னர் முன்பு கையிலே விலங்குடன் நிற்க வைத்தார்கள். அப்போது பதினான்கு லிடியா வாலிபர்கள் தீயிட்டுக் கொளுத்துவதற்காகத் தயாராக நிறுத்தப்பட்டிருந்தார்கள். பிறகு சிறுவர்களுக்காக அடுக்கி வைக்கப்பட்ட சிதைகளின் நடுவிலே சிறுவர்களுடன் குரோசிசையும் சிதையிலே படுக்க வைத்தது பாரசீக அரசு! இறுதியாக, ஏந்திய தீப்பந்தம் கொண்டு சிதைகளுக்கு எரியூட்ட வேண்டிய நேரத்தில் குரோசஸ், ‘சோலான், சோலான்’ என்று கூவினான்! மீண்டும் ஓங்கி உரக்கக் கூவினான்! பிறகு குரோசஸ்.

“எந்த மனிதனும் தனக்குச் சாவுவரும் வரை மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சாவே, ஒரு மனிதனின் கடைசி இன்பம்”

என்று, உரக்கப் பேசினான்! மீண்டும் சோலான், சோலான் என்று கை கூப்பி வணங்கினான்!

மன்னன் சைரஸ் அந்தக் கண்ணீர்க் கூக் குரலைக் கேட்டான்! சோலான் என்பவன் யார் என்று கேட்டான்! கூடியிருந்தவர்களை எல்லாம் நோக்கி, உங்களுக்குத் தெரியுமா? யார் அந்த சோலான்? என்றான். எந்த விதப் பதிலும் எவரிடமும் இருந்து வராததால், மீண்டும் குரோசசையே கேட்டான் அந்த மன்னன்! அப்போது குரோசஸ்: