பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ஹிராடெடஸின்


கொடையில் ஒன்றாவது உனக்குப் பிடித்திருந்தால், எரிகின்ற இந்தத் தீயிலே இருந்து என்னைக் காப்பாற்று” என்று, அப்பொலோ கடவுளை வேண்டினார். அந்த வேண்டு கோளைக் கேட்ட இந்தத் தெய்வம்; கருணையோடு, பெரு மழை ஒன்றைப் பொழிந்ததால், எரியும் சிதை அணைந்து விட்டது. மன்னன் ஆச்சரியப்பட்டுக் குரோசசைத் தழுவிக் கொண்டான்.

குரோசஸ் ஒரு நீதிமான், நன்னெறியாளர், நல்ல மனிதர்; தெய்வ உணர்வு சுரக்கும் ஆன்மிக இதயம் கொண்டவர் என்று பாரசீக மன்னன் சைரஸ் நம்பினார்! குரோசசைப் பார்த்து, “ஐயா, என் நாட்டின் மீது படையெடுக்குமாறு உமக்குக் கூறியது யார்?” என்று கேட்டார்.

“மன்னா, யாருமிலர், கிரேக்கத் தெய்வங்கள்தான் உன் மீது படையெடுக்க ஆணையிட்டனர். இந்த யுத்தத்திற்குக் காரணம் அவர்கள் தான். அமைதியைத்தான் ஒருவன் தேடுவானே தவிர, போரை எவனும் நாடமாட்டான். அமைதிக் காலத்தில் மகன், தனது தந்தைக்குக் கல்லறை எழுப்புவான்; போர்க் காலத்தில்தான் தந்தை தனது மகனுக்குக் கல்லறைக் கட்டுவான். இவ்வாறு, நடப்பதுதான் தெய்வக் கட்டளை; விருப்பமும் கூட” என்றார் குரோசஸ்.

‘ஐயா, தாங்கள் எனக்கு ஏதாவது அறிவுரை கூறுவீர்களா?’ என்று அந்த அரசர் குரோசசைக் கேட்டார். அப்போது நெஞ்சும் நெகிழ குரோசஸ்; மன்னா, நான் தங்களுடைய அடிமை. இருந்தாலும், நீங்களே என்னிடம் கேட்டுக் கொண்டதால் கூறுகிறேன்.

“சார்டிஸ் நகரச் செல்வங்களை உமது போர்வீரர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். எவன் அவர்களுக்குள் அதிகமாகக் கொள்ளையடிக்கின்றானோ, அவன் உங்களைப் பழிவாங்குவான். அவன் கொள்ளையடித்த பொருட்களை தங்களிடம் சேர்க்கமாட்டான்; ஏமாற்றுவான். எனவே, ஒன்று