உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வரலாற்று ஞானி ஹிராரெடடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்


1. உலக நாகரீகத்தின் தொட்டில்

ன்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் இலக்கண, இலக்கியங்களில் சிறந்து விளங்கி, பேசப்பட்டும், எழுதப்பட்டும் வந்த ஒரு மொழியாகும். அதே காலத்தில், கிரேக்கம்- எபிரேயம்- சீனம்- சமஸ்கிருதம் போன்ற மொழிகளும் பேசவும், எழுதவும் கூடிய நிலையிலிருந்தன.

பண்டையத் தமிழ் இலக்கண இலக்கியங்களான அகத்தியம், தொல்காப்பியம், திருக்குறள், அக நானூறு, புறநானூறு, எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற நூல்கள் எல்லாமே செய்யுள் வடிவிலேயே எழுதப்பட்டன.

அது போலவே கிரேக்க இலக்கணமான கிரமேடிஸ், மற்றும் ஹோமர் எழுதிய இலியட், ஒடிசி போன்ற கிரேக்க காவிய புராணங்கள் னைத்துமே செய்யுட் கோவைகளாகவே எழுதப்பட்டன.

இந்தியாவின் ஆதிக் காவியங்களான இராமயணம், பாரதம் போன்றவையும் சமஸ்கிருதச் செய்யுள் வடிவிலேயே அமைந்துள்ளன. இவை மட்டுமல்ல, நான்மறைகள், உபநிடதங்கள் ஆகமங்கள் எல்லாமே செய்யுள் வடிவிலேயே உள்ளன.