பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

69


வேறுபட்டுப் பின்பற்றப்படுகின்றது. ஆனால், கோயிலுக்கு வெளியே வந்ததும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களை விலைக்கு வாங்க முடியாது. இது அப்பெண்களின் ஒழுக்கமன உறுதியைக் காட்டுகிறது. தேவதாசிகள் எனக் கூறப்பட்ட இவர்கள வாழ்க்கையை வளமாக்கிட தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்து விட்டது. இந்தப் பழக்கம் சைப்ரஸ் தீவிலும் இருக்கிறது என்று ஹிராடெடஸ் கூறுகிறார்.

★ உலகம் எங்கும் உள்ள மக்கள், இடமிருந்து வலம்தான் எழுதிவந்தனர். ஆனால், எகிப்தியர் வலமிருந்து இடம் எழுதிவந்ததாக ஹிராடெடஸ் கூறுகிறார். இவ்வாறு வலமிருந்து இடம் எழுதும் பழக்கம் அரேபியர்களாலும், முஸ்லீம்களாலும் பிற்காலத்தில்தான் ஏற்பட்டன. சீனர்கள், ஜப்பானியர்கள் மேலிருந்து கீழாகவும், அராபியர்கள், முஸ்லீம்கள் வலமிருந்து இடமாகவும், இந்தியர்கள் தமிழர்கள், மற்ற நாட்டவர்கள் எல்லாரும் பொதுவாக இடம் இருந்து வலமாகவே எழுதி வருகின்றனர்.

★ எருது, சிவபெருமானுக்கு வாகனமாகும். எருதுவைக் காளை என்றும் நந்தி என்றும் தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் கூறுகின்றன. ஈஸ்வரன் கோயில்களில் எருது கோயிலின் முன்புறம் வைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், அது தெய்வாம்சம் என்பதால்தான். இதே புனிதம், எகிப்தியர்களாலும், குறிப்பாக மெம்பிஸ் நகரத்தில் எருதுக்குத் தனி இடமே வசிக்கக் கட்டிதரப்படுகின்றது. எருது பிறந்த நாளை அம் மக்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அதுபோலவே, எருது இறந்தாலும் அந்த நாள் துக்க நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அடுத்து ஒரு புனிதமான எருதுத் தேர்வு செய்யப்படும் வரை துக்க நாளைக் கொண்டாடிய படியே இருப்பார்கள்.

தமிழ் நாட்டில் எருது, பசு, கன்று ஆகியவைகளைக்கு கொம்புகளை சீவி, வண்ணங்கள் அடித்து, தொப்பிகளை அதன்