பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

ஹிராடெடஸின்


★ லிபிய மக்கள் திருமணமான பெண்ணை அரசரிடம் அழைத்துச் சென்று ஆசிபெறுவர். தமிழ் நாட்டுப் பெண்கள் திருமணமான பெண்களை சான்றோர்களின் ஆசியையும், தெய்வத்தின் அருளையும் நாடி வணங்குவார்கள்.

★ லிபியா பெண்கள் திருமண விருந்தில் வருகை தந்த விருந்தினர்களிடம் பரிசுகளைப் பெற்றதும், பரிசு கொடுத்தவர்கள் ஒவ்வொருவரும் அந்த மணப்பெண்ணிடம் இன்பம் பெறுவார்கள். அதை எதிர்த்து அங்கிருந்த பினீசியர் தமிழர்கள் பரிசுகளை மட்டுமே பெற்று, பரிசளித்தவர்களிடம் வாழ்த்துதலைப் பெற்றார்கள். இந்தப் பழக்கம் இன்றும் இங்கே இருப்பதைப் பார்க்கலாம்.

★ ஐரோப்பா, எகிப்து, கிரேக்க, லிபியா போன்ற நாடுகளில் நான்கு குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டி அதிலே அரசர்கள் செல்வார்கள். இதற்கு முன்னரே, அகநானூறு, இராமாயணம், பாரதம் போன்றவற்றில் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களில் மன்னர்கள் பவனி வந்த காட்சிகளுக்குச் சான்றுள்ளன.

★ பினீசியர் தமிழர்கள் தங்களது உடலில் விபூதி பூசிக் கொள்ளும் பழக்கம் இருந்ததைக் கண்ட லிபியர், திரேசியர்கள் தங்களது உடலில் சிவப்பு நிறக் கலவையைப் பூசிக் கொண்டார்களாம்.


13. தமிழர் வரலாறு எழுதிட ஹிராடெடஸ் தரும் ஊக்கம்!

ரு நாட்டிற்கு வரலாறு எவ்வளவு அவசியமானது என்பதை எண்ணிய வரலாற்று ஞானி ஹிராடெடஸ், எத்துணை நுணுக்கமான செய்திகளை, கதைகளை, சம்பவங்களை அரிதாகச் சேர்த்துத் தரமுடியுமோ அத்துணையையும் அழகாக, அருமையாக,