பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

77


விவரமாகத் தந்துள்ளதை இதுவரை ஓரளவாவது உணர்ந்து கொண்டோம்.

கிரேக்க - பாரசீக வரலாறுகளை, ஹிராடெடஸ் உலகுக்குக் கொடுக்கவில்லை என்றால், நாம் அந்த நாடுகளைப் பற்றி ஒன்றுமே அறிந்திருக்க முடியாது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு அவர், பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் நாடோடி ஞானியைப் போலச் சுற்றிச் சுற்றித் தேடிக் கண்டு பிடித்து ‘வரலாறுகள்’ என்ற நூலை அந்த மேதை மிகவும் அரும்பாடுபட்டுச் சேகரித்து எழுதி இருக்கின்றார். அதனால்தான், அவரை வரலாற்றின் ஆதித் தந்தை என்றும், உரைநடையின் முன்னோடி என்றும் இன்றும் உலகம் பாராட்டிக் கொண்டே இருக்கிறது.

இவற்றிக்கும் மேலாக, கிரேக்கர்கள், பாரசீகர்கள், சித்தர்கள், லிபியர்கள் ஆகியவர்களது பழக்க வழக்கங்களை, எழுத்தோவியங்களை, கல்வெட்டுக்களை கதைகளை, நீதிநெறிகளை, அந்தந்த நாடுகளின் நதியோட்டங்களை, அதன் நாகரிகங்களை, வானளாவி நின்ற எகிப்து நாட்டின் பிரமிடுகளை, அங்கங்கே வாழ்ந்த மன்னர்களை, வஞ்சகர்களை, அவர்களது சூழ்ச்சிகளை, நல்லவர்களை, நீதியை நிலை நாட்டிய பண்பாளர்களை, பண்பாளர்களை, பகட்டுக்காரர்களை, நல்லாட்சியாளர்களை, மனித நேயர்களை, அங்கங்கே உள்ள திருக்கோயில் தெய்வங்களை, மக்கள் செய்யும் வழிபாட்டு முறைகளை, எல்லாம் தொகுத்து புத்தகங்களாக்கி உலகுக்கு வழங்கி இருக்கின்றார்.

இவை எல்லாவற்றுக்கும் சிகரமாக, தமிழர் நாகரிகத்துக்கு எடுத்துக் காட்டாக, பினீசிரியர்கள் வரலாற்றை மிக நேர்மையாக ஆராய்ச்சி செய்து எழுதியுள்ள அவரின் வரலாற்று உழைப்பை நம்மால் மறக்க முடியாது.

பினீசியர்கள், தமிழ் நாட்டிலே இருந்து சென்ற தமிழர்கள் தான் என்பதை ஹிராடெடஸ் மிக அழகாக அருமையான சொலலோ