பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

ஹிராடெடஸின்


வியங்களாக வரைந்து காட்டி இருக்கின்றார். தமிழ் நாட்டிலே வாழ்ந்த பனையேறிகள் தான், பாமேசியர் - பினீசியர் என்பதற்கான சொல்லாய்வு வடிவமும், அதற்கான அவர்களது பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், நாகரீகமுறைகள் அத்தனையையும் தொகுத்துத் தந்து, மற்ற நாட்டினர்களின் பழக்க வழக்கப் பாண்பாடுகளையும் அத்துடன் விளக்கி, அவற்றை நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுமாறு விட்டு விட்டார்! அதுதானே பண்பட்ட அக்காலத்துக்குரிய ஒரு வரலாற்றாசிரியரின் அரும்பணி

நமது தமிழ் நாட்டின் வரலாறு, 4000 ஆண்டுகளுக்கு முன்பேயே உலகின் மேல் நாடுகளில் பரந்து பரவியிருந்தது என்பதை நாம் நினைத்துப் பெரும் மகிழ்ச்சி கொள்ள, ஹிராடெடஸ் ஆராய்ச்சி நமக்குப் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. இதனால், தமிழன் எனப்படுபவன் யாராக இருந்தாலும் சரி, அவனது உள்ளம் பேரானந்தம் கொள்கின்றது.

இது மட்டுமா? ஹிராடெடஸ் கூறும் அக்காலத்து மன்னர்களின் வரலாற்றுச் சம்பவங்களில், பெரிய புராண பிள்ளைக் கறியமுது படைத்த சிறுத் தொண்ட நாயனார் சம்பவம், இந்திய நாட்டின் சோதிட வித்தகர் வராக மிகிரர் சம்பவங்கள். பொய்யா மொழிப் புலவரது நிகழ்ச்சிகள், அமெரிக்காவிலே கிடைத்த தமிழர் கல்வெட்டு; அதிலே எழுதப்பட்டுள்ள ‘ஓம்’ என்ற எழுத்துக்கள், தமிழர் சமயமான சைவ தெய்வச் சிவபெருமானுடைய லிங்க வடிவம், போன்ற ஓவிய வரலாறுகள் நம்மை வியப்பூட்டி உள்ளத்தை விம்மச் செய்கின்றன.

தமிழ் நாட்டின் பழக்க வழக்கங்கள், பனையேறித் தமிழர்களான பினீசியர்களால், உலகமெங்கும் பரவியுள்ளதை, இந்தப் புத்தகத்தின் இறுதியிலே நாம் தொகுத்துக் கொடுத்துள்ளோம். இதற்கான ஆதிக்கர்த்தா வரலாற்று மேதை ஹிராடெடசின் ஆழமான ஆய்வுணர்வுகளே ஆகும்.