பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. நிமீ வனத்துச் சிங்கம்


நிமீ வனத்துச் சிங்கம் என்று நாடெங்கும் பயங்கரமானதாகக் கருதப்பெற்று வந்த விலங்கு அவ்வனத்தில் ஒரு குகையிலே வாழ்ந்து வந்தது. கல், இரும்பு, வெண்கலம் ஆகியவற்றில் செய்த கூரிய ஆயுதம் எதுவும் அதன் உடலில் பாய முடியாது; அதன் தோல் அவ்வளவு கடினமுள்ளது. இரவு நேரங்களில் அது தன் குகையை விட்டு வெளியே கிளம்பி, நூற்றுக்கணக்கான ஆடுமாடுகளைக் கடித்துக் கொன்றுவிடுவது வழக்கம். சில சமயங்களில் அது பகலிலும், சுற்றியிருந்த கிராமங்களுக்குச் செல்லுவதுண்டு. வழியில் மனிதர்களோ குழந்தைகளோ அதனிட சிக்கிவிட்டால், அவர்கள் உடனே அதற்கு இரையாகிவிடுவார்கள். நிமீ நகரில் சீயஸ் கடவுளின் ஆலயத்தைச் சுற்றியிருந்த வனம் முழுதிலும் அதுவே ஆதிக்கம் செலுத்தி வந்தது. எனவே அவ்வனத்தை ஒட்டியிருந்த கிராமங்களில் மக்கள் அல்லும் பகலும் அச்சிங்கத்தைப்பற்றிக் கிலி பிடித்து மறைந்து வாழ்ந்து வந்தனர். நிமீ நகரிலிந்து இரண்டு மைல் தொலைவில் இப்பொழுதும் ஒரு குகை இருந்து வருகின்றது. அதில்தான் அந்தக் கொடிய சிங்கம் வசித்து வந்தது என்று நகர மக்கள் கூறுகின்றனர்.


மைசீன் நகரை விட்டு வெலியே சென்ற ஹெர்க்குலிஸ், நேராக நிமீ வனத்தை நோக்கி நடந்து சென்றான். நெடுந்தூரம் சென்ற பின், நண்பகலில் வெயிலின் கொடுமை அதிகமாயிருந்ததால், அவன் ஓர் ஆயனின் குடிசையை அடைந்து, அங்கே சற்று நேரம் தங்கி ஓய்வெடுத்துக்கொள்ள விரும்பினான். அந்த வீட்டிலிருந்த ஆயன், அவனை அன்புடன் வரவேற்று, குடிப்பதற்கு அவனுக்கு நிறையப் பால் அளித்தான். கொஞ்சம் பலகாரமும் உண்டு, பாலைக் குடித்த பின், ஹெர்க்குலிஸ் குடிசையில் சற்றே தலை சாய்த்திருக்க எண்ணினான். ஆனால், குடிசையின் கூடம் போதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/14&oldid=1033570" இலிருந்து மீள்விக்கப்பட்டது