பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

11

அளவு நீளமாயில்லாததால், அவன் தன் கால்களை வாயிற்படிக்கு வெளியே நீட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. அவனுடைய உடல் அவ்வளவு உயரமாயிருந்தது! குடிசையில் அவன் நிற்கும் பொழுதும், நடக்கும் பொழுதும், நிலையைத் தாண்டும் பொழுதும் தலை குனிந்து, உடலையும் வளைத்துக்கொள்ள வேண்டியிருந்தது!


அவன் சிறிது நேரம் தூக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்தான். அது அந்தி மாலை. அப்பொழுது குடிசையில் ஆயனும் அவன் தாயும் ஏதோ வருத்தமுற்றுப் பேசிக்கொண்டிருந்தனர். அதைக் கவனித்த ஹெர்க்குலிஸ், என்ன விஷயம் என்று விசாரித்தான். ஆயனின் தாயான கிழவி, ‘இரண்டு மாதங்களுக் முன்னாள் இவனுடைய மனைவி வனத்திலிருந்து எங்கள் பசுக்கள் இரண்டைப் பற்றிக்கொண்டு வருவதாகப் போனவள் பிறகு மீண்டு வரவேயில்லை!’ என்று சொன்னாள். ஆயன் கண்ணிர் பெருக்கி அழுதுகொண்டிருந்தான். கிழவி தன் மகனையும் சமாதானம் செய்தாள். ‘நீ ஆண் பிள்ளை, இப்படி அழலாமா? நடந்தது நடந்துவிட்டது. காலிஸ்தை போய்விட்டால், அவளைப் போல் வேறொரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள் என்று அவள் தேறுதல் சொன்னாள்.

ஆயன் இனி அவள் வரப்போவதேயில்லை! நட்சத்திரங்ளைப் போல் மின்னிக் கொண்டிருந்த அவள் கண்களை நாம் இனிமேல் காணப்போவதேயில்லை! பதினாறு வயது - அதற்குள் அவளுடைய விதி முடிந்து விட்டது! அவளைக் கொன்ற அந்த மிருகம் இன்னும் நாசமாய்ப் போகவில்லையே!’ என்று துக்கத்தோடு பேசினான்.

‘என்ன மிருகம்?’ என்று ஹெர்க்குலிஸ் அவனைப்பார்த்து ஆவலுடன் கேட்டான். ஆயன், ‘நிமீ வனத்துச் சிங்கம், ஐயா! அதன் குகை அங்கேதான் இருக்கிறது. நாள்தோறும் அது பல உயிர்களைப் பழி வங்கிவிடுகின்றது. அதனால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் இங்கே அஞ்சி நடுங்கிக் கொண்டி ருக்கிறோம். அதன் கர்ச்சனையைக் கேட்டு ஆடு மாடுகள் கூடச் சரியாகத் தீனி தின்பதில்லை. அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/15&oldid=1074298" இலிருந்து மீள்விக்கப்பட்டது