பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

13

உதயமாவதையும் எதிர்பார்த்துக்கொண்டு, அவன் நின்ற இடத்திலேயே நிலையாக நின்றான்.


சிறிது நேரத்திற்குப்பின் நிலவொளியில் ஒரு நிழல் அசைவதை அவன் கண்டான். நிமீ வனத்துச் சிங்கம் அவன் கண் முன்பு வந்துவிட்டது! பருத்துக் கொழுத்த உடல், கறுப்பும் பழுப்பும் கலந்த நிறம், தரையிலே புரண்டுகொண்டிருந்த வால் ஆகியவற்றுடன் அந்தச் சிங்கம், தலையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகத் திருப்பிப் பார்த்துக்கொண்டும் , மேப்பம், பிடித்துக்கொண்டும் நடந்து வந்துகொண்டிருந்தது. ஹெர்க்குலிஸ் உடனே வலிமை மிகுந்த ஒரு பானத்தை வில்லிலே தொடுத்து, அவ்விலங்கின் மீது விடுத்தான். அது சிங்கத்தின் விலாப்புறத்தில் பாய்ந்தது. ஆனால், அதன் தோலில் ஊருவிச் செல்லாமல், நழுவி, ஆடிக்கொண்டே தரையில் விழுந்து விட்டது. சிங்கம் அவன் நின்ற திசையைத் திரும்பிப் பத்துவிட்டுக் தரையில் கிடந்த அம்பை முகர்ந்து பார்த்தது. அதற்குள் ஹெர்க்குலிஸ் இரண்டாவது அம்பு ஒன்றை அதன் மீது ஏவினான். அது ‘விர்ர்ர்’ என்று ரீங்காம் செய்துகொண்டே வேகமாகப் பாய்ந்தது. ஆனால், சிங்கத்தின்மேலே அது தாக்கியதும், இரண்டாக முறிந்து கீழே வீழ்ந்துவிட்டது. அப்பொழுது சிங்கம், காடே அதிரும்படி கர்ச்சனை செய்துகொண்டு, அம்பு வந்த திசையை நோக்கிப் பாய்ந்து சென்றது.


ஹெர்குலிஸுக்கும் போராட வாய்ப்பு வந்து விட்டதென்ற மகிழ்ச்சியுடன் தன் மறைவிடத்திலிருந்து குதித்து, வெளியே சிங்கத்தை எதிர்கொண்டு ஓடினான். மக்களிலே தலைசிறந்த வீரனும், விலங்குகளிலே தலைசிறந்த சிங்கமும் எதிர் எதிராகத் தோன்றியக் காட்சி வியக்கத்தக்கதாயிருந்தது. சில விநாடிகள் சிங்கம் அவனை உற்றுப் பார்த்தது, அவனும் அதைக் கவணித்துக்கொண்டான். அவன்மீது பாய்வதற்காக அது பதி போட்டது. அதற்குள் அவன் தன் கதையை எடுத்து அதன் மண்டைக்கு நேராகக் குறிபார்த்து எறிந்துவிட்டான். ஆயினும், பிடரி மயிர் அடர்ந்திருந்த சிங்கத்தின் தலையில் தாக்கிய கதை அதற்கு ஒரு கேடும் விளைவிக்காமல் கீழே விழுந்துவிட்டது. எனினும், வல்லான் ஒருவன் தன்னை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/17&oldid=1074300" இலிருந்து மீள்விக்கப்பட்டது