பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஹெர்க்குலிஸ்

எதிர்க்க வந்திருக்கிறான் என்பதைச் சிங்கம் உணர்ந்துகொண்டது. அதுவரை எந்த மனிதனும் அந்த அளவுக்கு அதை எதிர்த்து ஆயுதங்களை உபயோகித்ததில்லை. ஆகவே, அது மெதுவாகப் பின்னடைந்து புதர்களிலே பாய்ந்து மறைந்துவிட்டது. ஹெர்க்குலிஸுசும் தன் கதையையும். முரிந்து கிடந்த அம்புகளையும் எடுத்துக்கொண்டு, அந்த இடத்தை விட்டு அகன்று சென்றான். அன்றிரவு அவன் மேற்கொண்டு சிங்கத்தை நாடிச் செல்லவில்லை.

அவன் இரவுப்பொழுதை ஒரு குடியானவன் விட்டிலேயே கழித்தான். அவன் யார் என்பதையும், அவன் மேற்கொண்டுள்ள பணியையும் தெரிந்து கொண்ட குடியானவன், மிக்க அன்புடன் அவனை உபசரித்தான். அங்கிருந்த பொழுது ஹெர்க்குலிஸ் நிமீ வனத்துச் சிங்கத்தின் கொடுமைகளைப் பற்றி மேலும் பல செய்திகளைக் கேள்விப்பட்டான். மறு நாள் காலை அவன் குடியானவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதல் சொல்லி, விரைவிலே சிங்கம் விண்ணுலகை அடையுமென்றும் தெரிவித்தான். பிறகு; அவன் வெளியே சென்று, ஆற்றில் நீராடிவிட்டு வந்து உணவருந்தினான்; பிறகு, ஒரு யாழ் கொண்டுவரச் சொல்லி, அதை மீட்டி, அருமையாக வெகுநேரம் பாடிக்கொண்டிருந்தான். அவனைப் பார்ப்பதற்கும். அவனுடைய இசையைக் கேட்பதற்குமாக மக்கள் திரளாகக் கூடியிருந்தனர். இசைக்குப் பின் அவன் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினான். அவன் ஓடுவதும், சாடுவதும், துள்ளுவதும், தாவுவதும், இரும்புச் சக்கரங்களை வீசுவதும் அங்கிருந்த இளைஞர்களுக்கும் கன்னியர்களுக்கும் கன்னியர்களுக்கும் ஆனந்தக் காட்சியாக இருந்தது.


அன்று நண்பகலுக்குப் பின் சிறிது நேரம் கழிந்து, ஹெர்க்குலிஸ் வனத்தை நோக்கிக் இளம்பினான். வழியிலே அவன் விசாரித்ததில், முந்திய நாள் இரவிலும் சிங்கம் ஒரு மனிதனைக் கொன்று தின்றதாகத் தகவல் தெரிந்தது. ஒரு மைல் தூரத்திற்கு அப்பால், ஒரு குன்றின்மேல், சிங்கம் மனித உயிரைப் பலி வாங்கிய இடத்தைச் சில ஜனங்கள் அவனுக்குக் காட்டினர். அங்கிருந்து அவன் சிங்கத்தைத் தேடிக்கொண்டு தனி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/18&oldid=1033578" இலிருந்து மீள்விக்கப்பட்டது