பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

15

யாக நடந்து சென்றான். செடிகளும் கொடிகளும் பின்னி அடர்ந்திருந்த வனத்தில் அவைகளை ஊடுருவிக் கொண்டு அவன் வேகமாக மேலேறிச் சென்றான். அன்று மாலை நேரத்தில் அவன் சிங்கத்தின் குகையைக் கண்டுகொண்டான். மலையில் முன்புறமாக நீண்டிருந்த ஒரு பெரும்பாறையின் அடியில் அந்தக் குகை அமைந்திருந்தது. அதற்கு மேலும் கீழும் மரங்கள் அடர்ந்த வனம் பரவியிருந்தது. குகையைச் சுற்றிப் பல எலும்புகள் சிதறிக் கிடந்தன. அந்த இடத்திலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

சிங்கம் குகையிலிருப்பதைக் கண்ட ஹைர்க்குலிஸ், மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்துக்கொண்டு, தன் கதையைக் கையிலெடுத்து அதன் நெற்றியை நோக்கிக்கி வீசினான். எழுத்தாணிக் கொண்டைகள் போல முடிச்சுகள் அமைந்திருந்த அந்தக் கதை சிங்கத்தின் புருவங்களை ஒட்டி பலமாகத் தாக்கியது. அதனால் அதிர்சியடைந்த சிங்கம், கடுஞ்சிற்றத்துடன் அவன் மீது பாய்ந்து வந்தது. அதை எதிர்பார்த்துத் தயாராயிருந்த வீரனும் சரேலென்று அதை நோக்கிப் பாய்ந்தான். சிங்கம் கால்களால் தன்னை பற்றிக்கொள்வதற்கு முன்னால் அவன் இரண்டு கைகளையும் முன்னால் நீட்டிக்கொண்டு, அதன் பிடரி மயிருக்குள் செலுத்தி, அதன் குரல் வளையை இறுகப் பிடித்துக்கொண்டான். அம்பும், வாளும் கதையும் வதைக்க முடியாத அந்த மிருகத்தைக் கைகளின் பலத்தாலேயே வதைக்க வேண்டும் என்று அவன் முன்பே திட்டம் செய்திருந்தான். அதன்படியே அப்போது குரல் வளையைப் பற்றிக்கொண்டுவிட்டான். அந்த நேரத்தில் அவனுக்கும் சிங்கத்திற்கும் மிகக் கோரமான யுத்தம் நடந்தது. சிங்கம் கால் பாதங்களால் அவனைத் தாக்கி நகங்களால், பிறாண்டிற்று. அவனுடைய உடலில் பலபகுதிகளிலிலிருந்து உதிரம் உதிரம் வடியத் தொடங்கியது. எனினும். சிங்கத்தின் உறுமலுக்கு ஏற்றபடி ஹெர்குலிஸும் உறுமுனான். வயிரம் பாய்ந்த பனைகளைப் போன்ற அவனுடைய கைகள், சிங்கத்தின் கழுத்தின் பிடியை விடவேயில்லை. இவ்வாறு நெட்நேரம் வனராஜனுக்கும் மானிட திலகத்துக்கும் மற்போர் நடந்துகொண்டிருந்தது. ஹெர்க்குலிஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/19&oldid=1033592" இலிருந்து மீள்விக்கப்பட்டது