பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

21

இரு தலைகள் வீதம் உடனே முளைத்திருப்பதை அவன் கண்டு திகைத்தான்.


உடனே அவன் தன் கதையைக் கையில் எடுத்துக் கொண்டு நாகத்தின் மீது பாய்ந்து, அதன் தலைகளை தையப் புடைத்தான். நாகமும் இடிபோல் குமுறிக் கொண்டு அவனைத் தாக்க முயன்றது. ஆனால், அவன் அதற்குப் பிடிகொடுக்காமல், பம்பரம்போல் சுழன்று சுழன்று அதைத் தாக்கிக்கொண்டேயிருந்தான். இக்காட்சியைத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அயோலஸுக்கு எதுவும் தெளிவாய்த் தெரியவில்லை. அத்தனை வேகத்துடன் ஹெர்க்குலிஸ் நாகத்தின் தலைகளை அடித்து வதைத்துக்கொண்டிருந்தான். ஆயினும், புதிய புதிய தலைகள் முளைத்துக்கொண்டேயிருந்தன. அந்த நேரத்தில் ஹீரா தேவியின் ஏவலால், கடல் ஆமை போன்ற பெரிய நண்டு ஒன்று அவனுடைய பாதம் ஒன்றைப் பற்றிக் கொண்டு கடித்தது. அவன் அதைக் கவனிக்காமலே துள்ளிக் குதித்ததில் அந்த நண்டு அவன் காலடியில் அகப்பட்டுச் சடசடவென்று உடைந்து நசுங்கிப் போய்விட்டது. ஹீரா தேவி அந்த நண்டுக்கு நன்றி செலுத்துதுவதற்காக அதை வானத்தில் ‘கர்க்கடக’ நட்சத்திர ராசியாக நிறுத்தி வைத்தாள் என்று கிரேக்கக் கதைகள் கூறுகின்றன.


அன்று அம்புகளாலும் கதையாலும் நாகத்தை வதைக்க முடியாதென்று கண்ட ஹெர்க்குலிஸ், அயோலஸுடன் வனத்திற்குத் திரும்பிச் சென்று, ஓரிடத்தில் தங்கியிருந்தான். அங்கே சிறிது நேரம் அமர்ந்து ஆலோசனை செய்து, அவன் ஒரு பெரிய மரத்ததை, வெட்டிச் சாய்த்தான். அதன் கிளைகளையெல்லாம் தனித்தனியாக முறித்து அடுக்கி வைக்கும்படி அயோலஸிடம் சொல்லிவிட்டு, அவன் கிராமப்புறதிலிருந்த ஒரு கருமானிடம் சென்று, இரண்டு நீண்ட இரும்புக் கம்பிகள் தயாரித்து வாங்கி வந்தான். அவைகளின் முனைகள்மட்டும் தட்டையாக அடிக்கப்பெற்றிருந்தன.


மறு நாள் காலையில் அயோலஸ் கொப்புக்களையும் குச்சிகளையும் குவித்து, அவற்றில் தீ மூட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/25&oldid=1074304" இலிருந்து மீள்விக்கப்பட்டது