பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

23

குலிஸ் நாகத்தைத் தாக்கிக்கொண்டேயிருந்தான். அயோலஸ் ஒவ்வொரு கம்பியாகக் காய்ச்சிக் கொணர்ந்து தன் பொசுக்கல் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தான். நாகத்தின் விஷ மூச்சினால் அவர்கள் இருவருடைய கண்களும் பாதி கருகிப் போய்விட்டன. ஆயினும், அவர்கள் சிறிதுகூட அயரவில்லை. அயர்ந்திருந்தால் அவர்களுடைய உயிருக்கே ஆபத்து விளைந்திருக்கும்.


மாலைக் கதிரவன் மறையும் நேரத்தில், நாகத்தின் அழிவில்லாத தலை என்று சொல்லப்பெற்ற கடைசித் தலையையும் ஹெர்க்குலிஸ் வாளால் அரிந்து தள்ளினான். அது கீழே விழுந்தவுடன் அவன் அத்தலை மீது ஒரு பெரும்பாறையை உருட்டி, அதை மடுவுக்குள் ஆழ்த்திவிட்டான். பிறகு அவன் நாகத்தின் உடலையும் பிளந்தெறிந்தான். அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னால், அவன் தன் அம்புகள் அனைத்தையும் எடுத்து நாகத்தின் விஷத்தில் நன்றாக, தோய்த்துக் கொண்டான் . பின்னால் அந்த அம்புகள் எந்தப் பிராணி மீது பட்டாலும் அது மாய்ந்துவிடும்படி அவற்றில் விஷம் தோய்ந்திருக்கட்டும் என்பதற்காகவே அவன் இவ்வாறு செய்தான்.


லெனா தோட்டமும், அங்கிருந்த மடுவும் ஆயிக்கணக்கான போர் வீரர்கள் நின்று போராடிய களம் போலக் காட்சியளித்தன. ஒரு கொடிய நாகத்தை, வதைக்க அவ்வளவு பெரிய போராட்டம் அவசியமாயிருந்தது. மன்னன் யூரிஸ்தியஸ் பணித்த இரண்டாவது வேலை இவ்வாறு இனிது முடிந்துவிட்டது. ஹெக்குலிஸ், பையனை அழைத்துக்கொண்டு நல்ல நீருள்ள ஒரு பொய்கையை அடைந்தான். அங்கே இருவரும் தங்கள் உடல்களைச் சுத்தம் செய்துகொண்டனர். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டால் அடையாளம் தெரியாதபடி அவ்வளவு மாறியிருந்தனர். இருவரும் களைப்புற்றிருந்ததால், இரவில் வனத்திலேயே படுத்து உறங்கினார்கள்.


மறுநாள் காலை லெர்னா தோட்டத்தைச் சுற்றியிருந்த மக்கள் கூட்டம் கூட்ட-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/27&oldid=1033638" இலிருந்து மீள்விக்கப்பட்டது