பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ஹெர்க்குலிஸ்

மாக வந்து ஹெர்க்குலிஸைப் பலபடப் பாராட்டி வணங்கினார்கள். லெர்னா நாகத்தை வீழ்த்திய மகத்தான வெற்றியை அவர்கள் வாயாரப் புகழ்ந்து, வீரன் ஹெர்க்குலிஸ் நெடுநாள் வாழ வேண்டுமென்று வாழ்த்தினார்கள். அவனோடு, அயோலஸையும் அவர்கள் மறக்காமல் போற்றினார்கள். பிற்காலத்தில் அந்தப் பக்கத்து மக்கள் தாங்கள் ஏதாவது சபதம் செய்வதாயிருந்தால், ‘அயோலஸ்ஸைப் போல் விசுவாசமாக இருந்து நிறைவேற்றுவோம்!’ என்று சொல்லுவது வழக்கமாயிற்று. அயோலஸின் பெயரால் லெர்னாவுக்கு அருகில் ஒரு கல் தூணூம் நாட்டப் பெற்றது.

நாகத்தை வதைத்த வெற்றிச் சின்னங்களுடன் ஹெர்க்குலிஸ், மன்னனைக் காண விரைந்து சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/28&oldid=1074306" இலிருந்து மீள்விக்கப்பட்டது