பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஹெர்க்குலிஸ்

கேள்வியுற்று, அவன் கோயில் அருகிலேயிருந்த பாதைகளைக் கவனித்துக்கொண்டு காத்திருந்தான். அந்தப்பக்கத்தில் தங்கியிருப்பதே மிகவும் கஷ்டமாயிருந்தது. ஈக்களும் வண்டுகளும் இடைவிடாமல் கடித்துத் துன்புறுத்தின, பருத்துக் கொழுத்திருந்த பல்லிகள் அவன் கால்களின்மேலும், உடலின்மீதும் ஊர்ந்து சென்றன. ஆந்தைகளின் அலறலைக் கேட்கச் சகிக்கவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பின் ஹெர்க்குலிஸ் மானைக் கண்டு கொண்டான். அதன் அழகைக் கண்டதும், அவன் தான் அடைந்த துயரையெல்லாம் மறந்து, அதைத் தொடர்ந்து ஓடலானான்.


மானைப்பற்றிய செய்திகளை முன்னதாகக் கேட்டறிந்திருந்த ஹெர்க்குலிஸ் தானும் தன் கால்களில் பித்தளைத் தகட்டிலே செய்த செருப்புகள் அணிந்திருந்தான். அவை அக்கினி தேவனால் அவனுக்கு முன்பு பரிசாக அளிக்கப் பெற்றவை. அவைகளைப் பாதங்களில் அனிந்துகொண்டு எந்தப் பாறையிலும் வனாந்தரத்திலும் அதிகக் களைப்பில்லாமல் ஓடிச் செல்ல முடியும். மேலும் மானைப் பிடிப்பதற்குப் போராட்டம் எதுவும் தேவையிராது என்பதால், அவன் தன்னிடமிருந்த விஷம் தோய்ந்த அம்புகளுக்குப் பதிலாகச் சாதாரண அம்புகளையும் வில்லையுமே எடுத்து வந்திருந்தான்.


இரண்டு நாள்களாக மான் தனக்குப் பழக்கமான ஏரியைச் சுற்றியுள்ள காட்டிலேயே ஓடிச் சென்றது. ஹெர்க்குலிஸும் ஓய்வில்லாமல் அதைப் பின்பற்றி ஓடினான். மானின் வேகத்தையும், தந்திரங்களையும் கண்டு, அவனே வியப்படைந்தான். ஆனால், அது எங்கிருந்தாலும், பொன்னால் முடி செய்து தலையில் வைத்தது போன்ற அதன் கொம்புகளின் ஒளியாலும், உடலின் வெண்மை நிறத்தாலும், அதனைக் கண்டு கொள்வது எளிதாயிருந்தது. அதுவும், தன்னைத் துரத்தி வருபவன் விடாக் கண்டன் என்பதைத் தெரிந்து கொண்டு, தன் வனத்தை விட்டு வெளியே பாய்ந்து, மேற்குத் திசையில் ஓடத் தொடங்கிற்று. காற்றுதான் வேகமாக வீசும் என்று சொல்லுவார்கள்; ஆனால், அது காற்றினும் கடிய வேகத்தில் ஓடிச் சென்றது. அதன் பித்தளைக் குளம்புகளும், ஹெர்க்குலிஸ் பித்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/30&oldid=1033687" இலிருந்து மீள்விக்கப்பட்டது