பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ஹெர்க்குலிஸ்


அந்த நேரத்தில் திடீரேன்று மேகமண்டலத்திலிருந்து முழு மதி வெளியே வந்ததை அவன் கவனித்தான். கண் மூடித் திறப்பதற்குள் ஆர்ட்டிமிஸ் தேவியே தலையில் இளம்பிறை சுடர்விட, அவன் எதிரில் வந்து நின்றாள். அவள் கோபத்தால் கொதித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய காலடியில் கலைமான் படுத்திருந்தது. அவளுக்குப் பின்னால் வேட்டை நாய்களைப் பற்றிக்கொண்டு அவளுடைய பணிப் பெண்களாகிய மோகினிகள் பலர் நின்றுகொண்டிருந்தனர்.


ஆர்ட்டிமிஸ் ஹெர்க்குலிஸைப் பார்த்து, ‘ஆகா, நீதானா என் மானை வேட்டையாட வந்திருக்கிறாய்? வேட்டைக்கு நானே அதிதேவதை என்பதையும் மறந்து, என் அருமை மானையே பிடிக்கத் துணிந்துவிட்டாயா நீ? நான் ஓர் அம்பைக் கையிலெடுத்தாலே போதும், உன் ஆவி பிரிந்துவிடும்!’ என்று படபடப்பாகப் பேசினாள்.


அந்த இடத்தில் வீரத்தைக் காட்டிலும் மதியைப் பயன்படுத்த வேண்டுமென்று உணர்ந்த ஹெர்க்குலிஸ், உடனே தரையில் முழந்தாளிட்டுத் தேவியை வணங்கிப் பேசலானான்: ‘நானாக இந்த மானைப் பிடிக்க வருவேனா? என் அங்கங்களை இழப்பதாயினும், இதைத் துரத்துவதற்குத் துணிவேனா? சீயஸ் கடவுளின் கட்டளைப்படி மன்னன் யூரிஸ்தியவின் பணியை நிறைவேற்றுவது என் கடமையாயிற்று. தெய்வ சாபத்திற்கு அஞ்சி வந்த என்னைத் தாங்களும் வெறுத்துப் பேசினால் எனக்குப் புகலிடம் ஏது?


அதைக் கேட்டதும் தேவி எல்லா விஷயங்களையும் புரிந்துகொண்டாள். அந்த வீரனிடம் அவள் கொண்டிருந்த கோபம் அருளாக மாறிவிட்டது. ‘சரி, மானை எடுத்துக்கொண்டு போய் யூரிஸ்தியஸிடம் காட்டிவிட்டு, மறுபடி இங்கே எனது ஆலயத்தில் அதைச் சேமமாகக் கொண்டு வந்து சேர்த்துவிடு என்று அவள் பரிவுடன் கூறினாள்.


ஹெர்க்குலிஸ் அவளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மானை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். தேவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/32&oldid=1074312" இலிருந்து மீள்விக்கப்பட்டது