பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

31

இரண்டு பெரிய வேட்டைநாய்களும் அவனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. அவனுக்குத் தேவையென்றால், வழியிலே குடியிருந்த ஜனங்கள் நூற்றுக்கணக்கான வேட்டைநாய்களைக் கொடுத்து உதவியிருப்பார்கள். ஏனெனில், எல்லோருக்கும் அந்த மலைப்பன்றி தொலைய வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வமிருந்தது.


மலையின் அடிவாரத்தை அடைந்ததும், நாய்கள் இாண்டும் மோப்பம் பிடிக்கத் தொடங்கின. அவை பன்றியிருந்த திசை நோக்கிக் கிளம்பியதும், ஹெர்க்குலிஸ் அவைகளைத் தொடர்ந்து சென்றான். மலைப் பன்றி மதிய உணவுக்காக அலைந்துகொண்டிருந்தது. அன்று மாலை வரை நாய்கள் அதைத் தொடர்ந்து மிகுந்த வேகத்துடன் ஓடிக்கொண்டிருந்தன. ஹெர்க்குலிஸும் தளராமல் ஓடினான். அன்று பன்றியைக் காண முடியவில்லை.


மறு நாளும் பன்றி வேட்டை தொடர்ந்து நடைபெற்றது. அது ஓடவும், நாய்கள் துரத்தவுமாக மனிக் கணக்காகத் தொடர்ந்து அவ்வேட்டை நடந்தது. கடைசியாக அது ஓர் ஓடைக் கரையில் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தது. அதன் முன்புறம் ஓடை, பின்புறம் செங்குத்தான பாறை ஆகியவை இருந்தன. அந்த நிலையில் அது நடமாடும் குன்று போல விளங்கிய வீரனையும், யமதூதர்களைப் போல விளங்கிய இரு நாய்களையும் ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு, பாறையில் தன் தந்தங்களைத் திட்டத் தொடங்கியது. அதன் கால்கள் தரையைப் பிராண்டி மண்ணை அள்ளி விக்கொண்டிருந்தன. அதன் வாய் வெண்மையான நுரையைக் கக்கிக் கொண்டிருந்தது. கோபத்தோடு விளங்கிய அக்கொடிய மிருகம் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. இயற்கையில் மிகுந்த வீரத்துடன் விவங்கிய வேட்டைநாய்கள் இரண்டும், கோரமான தந்தங்களையும். பன்றியின் உருவத்தையும் பார்த்தவுடன் துணுக்ககமுற்றன. ஹெர்க்குலிஸ் உரக்கக் கூவி அவைகளை உற்சாகப்படுத்தி அழைத்துச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/35&oldid=1033701" இலிருந்து மீள்விக்கப்பட்டது