பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ஹெர்க்குலிஸ்


பன்றி ஒரு நாயை முதுகில் கடித்துத் தள்ளிவிட்டு, மற்றதன் உடலைக் கிழித்து ஓடையிலே வீசிவிட்டது. ஒரே கணத்தில் இந்த அற்புதம் நடந்ததைக் கண்ட ஹெர்க்குலிஸ், மேற்கொண்டு தான் மட்டுமே தனியாக நின்று அதனுடன் போராட வேண்டும் என்று தீர்மானித்தான். பன்றி பாறையின் அடியிலிருந்த தன் குகையை விட்டு, வேறு புறமாகத் திரும்பி ஒரு பாதை வழியாக மலைமீது ஏறத் தொடங்கிற்று. மலைமேலே போகப் போகப் பணி அதிகமாகப் பெய்து கொண்டிருந்தது. பனி பெய்ததால், பாதையும் பல இடங்களில் மறைந்துவிட்டது. ஆயினும், ஹெர்க்குலிஸ் பன்றியைத் தொடர்வதை நிறுத்தவில்லை. பன்றியும் ஓடி ஓடிக் களைத்துப் போய்விட்டது. எங்குப் போய் விழலாம் என்று அதற்கு அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டுவிட்டன. அந்த நிலையில் ஹெர்க்குலிஸ் அதன் மீது பல பாணங்களை விடுத்தான். ஆனால், ஓர் அம்புகூட அதன் உடலுள் பாயவில்லை ; அதன் உடல் மீது, பட்டவுடன் எல்லாம் வழுக்கிக் கீழே விழுந்துவிட்டன. பன்முறை அவன் தன் கதையை வீசிப் பார்த்தான். கதையும் பயனற்று வீழ்ந்தது. பன்றி அளவற்ற உரத்துடன் வரமும் பெற்றிருந்தது. என்பதை அவன் கண்டான். எனினும், அது புதர்களுக்குள் மறைந்து சற்று ஒய்வெடுத்துக்கொள்ள முயன்ற பொழுதெல்லாம், அவன் வாயால் ஊளையிட்டு அதை வெளியே கிளப்பி வந்தான். அது அயர்ந்தால், அவன் விரட்டினான், அது வேகமாய்ப் பாய்ந்தால், அவன் சிறிது பின் தங்கிக்கொண்டான். இவ்வாறு அதன் தொடர்பு விட்டுப் போகாமல், அவன் நெருங்கிச் சென்றுகொண்டிருந்தான்.


பன்றி எப்படியும் மலைமீது ஏறிக் கொண்டேயிருக்கும்படி செய்ய வேண்டும் என்பதே அவன் யோசனை. இரவுப்பொழுதில் மலையிலே ஒரு வேடனுடைய குடிலில் அவன் தங்கியிருந்து, மறு நாள் காலையில் இரண்டு வேட்டை நாய்களை வாங்கிக் கொண்டு மீண்டும் பன்றியைத் தொடரலானான். நாய்கள் இரண்டும் இரண்டு பக்கங்களிலும் முன்செல்ல, நடுவில் ஹெர்க்குவிஸ் போய்க் கொண்டிருந்தான். பன்றியை அதிகமாய் விரட்டினால், அது திரும்பி மறுபடி சமவெளியான தரைக்கு இறங்கிவிடும் என்ப-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/36&oldid=1033703" இலிருந்து மீள்விக்கப்பட்டது