பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

35

கோரத் தந்தங்களை வெளியே நீட்டலாயிற்று. அதைக் கண்டவுடனேயே யூரிஸ்தியஸ் எழுந்து தனக்காக அமைத்திருந்த பித்தளை அறைக்குள் புகுந்து, கதவைத் தாழிட்டுக் கொண்டான். அந்த நேரத்தில் ஹெர்க்குலிஸ், இடியிடிப்பது போல் உரக்கச் சிரித்து, அவனைப் பரிகாசம் செய்தான். அங்கே கூடியிருந்த அரண்மனை அதிகாரிகளும், ஊழியர்களும் மத யானை போன்ற பன்றியியையும் அதையும் அடக்கித் துாக்கி வந்த வீரனையும் பார்த்துப் பிரமிப்படைந்து நின்றனர்.


தனியான அறைக்குள்ளே ஆபத்தில்லை என்று மன அமைதியடைந்த யூரிஸ்தியஸ், மேற்கொண்டு ஹெர்க்குலிஸை எப்படி இழிவு செய்யலாம் என்று யோசனை செய்தான். அதுவரை அவன் ஏவியபணிகளில் ஹெர்க்குலிஸின் புகழ் அதிகமானதைத் தவிரக் குறைவடையவில்லை. இனி அருவருப்பான இழிவான வேலை ஒன்றை இவனுக்குக் கொடுத்துச் சிறுமைப்படுத்த வேண்டும்! என்று அந்த மதிகெட்ட மன்னன் முடிவு செய்நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/39&oldid=1033789" இலிருந்து மீள்விக்கப்பட்டது