பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

37

நொடிகள் ஏற்படவில்லையாயினும், சுற்றிலும் அக்கம் பக்கங்களில் மக்களுக்குப் பல வியாதிகள் ஏற்பட அவை காரணமாயிருந்தன. அவைகளின் நாற்றம் சுற்றிலும் பல காத தூரம்வரை வீசிக் கொண்டிருந்தது என்பார்கள்.

இத்தகைய துர்க்கந்தம் நிறைந்த தொழுவங்கள் அனைத்தையும் ஹெர்க்குலிஸ் ஒரே நாளில் சுத்தம் செய்ய வேண்டுமென்று யூரிஸ்தியஸ் பணித்தான். இது அவனுடைய ஐந்தாவது கட்டளை. தொழுவங்களில் பல்லாண்டுகளாகச் சேர்ந்திருந்த உரங்களை ஹெர்க்குலிஸ் கூடை கூடையாக அள்ளித் தலையிலே சுமந்து வெளியிலே கொண்டு போய்க் கொட்டுவான் என்று எதிர்பார்த்து, அவன் இந்த இழிவான பணியைக் கொடுத்திருந்தான். எந்த வேலையாயிருந்தாலும், சீயஸ் கடவுளுக்காக ஹெர்க்குலிஸ் செய்து தீரவேண்டியிருந்தது.

எனவே, அவன் ஈலிஸ் நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றான். இரண்டு நாள்களில் அவன் அங்கே போய்ச் சேர்ந்தான். மலைச் சாரலில் ஆஜியஸின் அரண்மனையையும், தனியான ஒரு பெரிய நகரம் போல அமைந்திருந்த அவனுடைய தொழுவங்களையும அவன் பார்த்தான். அங்கே ஒரு பாறையின்மேல் அார்ந்துகொண்டு, எல்லாத் தொழுவங்களையும் ஒரே நாளில் எப்படிச் சுத்தம் செய்வது என்பதைப்பற்றி அவன் சிறிது நேரம் சிந்தித்தான். அருகிலே ஓடிக்கொண்டிருந்த பீனியஸ் என்ற ஆற்றையும், மலைமேலும் அடிவாரத்திலும் மேய்ந்து திரிந்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆடுகளையும் மாடுகளையும் அவன் கவனித்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றிவிட்டது. உடனே அவன் பறையை விட்டு எழுந்து அரண்மனைக்குச் சென்று அரசனைக் காண விரும்பினான்.

நீண்ட தாடி மீசைகளுடன், தொண்டு கிழவனாயிருந்த, ஆஜியஸ் மன்னனுடன் அப்பொழுது அவனுடைய குமாரர்கள் இருவரும் இருந்தனர். ஹெர்க்குலிஸ் மன்னனை மிடுக்குடன் பார்த்து, ஆண்டவன் சீயஸ் ஆணையால் உங்களுடைய தொழுவங்களைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/41&oldid=1033795" இலிருந்து மீள்விக்கப்பட்டது