பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

ஹெர்க்குலிஸ்

வைத்திருந்தான் தான் தோண்டிய வாய்க்காலை அந்தப் பழைய காலுடன் கொண்டு போய்ச் சேர்த்து, அதன் வழியாகத் தண்ணீர் ஓடும்படி செய்தான். அந்த நீர் தொழுவங்களில் பாய்வதற்கேற்ற சிறு ஓடைகளையும் அவன் விரைவிலே தொட்டுவிட்டான். அதற்கப்பால், அவன் மீண்டும் ஆற்றின் பக்கம் வந்து நின்றுகொண்டு, ஆற்றை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். ‘உயிர்களுக்கெல்லாம் உணவளிக்கும் பீனியஸ் தாயே! என்னை மன்னித்துக்கொள்ளவும்! தேவ கட்டளையை நிறைவேற்ற வந்துள்ள நான் உனக்கு எவ்விதக் கேடும் செய்ய விரும்பமாட்டேன். ஆயினும், சிறிது நேரத்திற்கு உன்னுடைய தெள்ளிய நீர் ஆஜியளின் தொழுவங்களில் வெள்ளமாகப் பாய்ந்து அவைகளைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கின்றது. அதற்காக நீரிலே கட்டைகளை அடுக்கி அனை அமைத்து நீரை இங்கேயே தேக்கிக்கொள்ள உன் அநுமதியை வேண்டுகிறேன்:’ என்று கூறி அவன் தொழுதுகொண்டே, கட்டைகளை வேகமாக எடுத்து ஆற்றில் அழுத்தி, அனையை அமைக்கத் தொடங்கினான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் அல்லவா! தண்ணீர் அணைப்பக்கத்தில் தேங்கி வாய்க்கால் வழியாகப் பெருவெள்ளமாகப் புரண்டோடத் தொடங்கி விட்டது. தோழுவங்களுக்குள்ளே ஆற்று நீர் அலையும் நுரையமாகப் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது! அம்மட்டோடு நிற்காமல் சுற்றிலும் மலையடிவாரம் வரை ஒரே வெள்ளக்காடாகி விட்டது! மரங்கள் செடிகளெல்லாம் வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தன. வெள்ளத்தைப் பார்த்துப் பார்த்து, ஹெர்க்குலிஸ் எல்லையற்ற மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்துகொண்டிருந்தான்.


அன்று மாலைவரை வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்துகொண்டிருந்தது. ஹெர்க்குலிஸின் கையில் துளி அழுக்குக்கூடப் படாமலே, தொழுவங்கள் எல்லாம் துப்புரவாகி விட்டன. மேய்ச்சல் தரைகளும் பரிசுத்தமாக விளங்கின. சுற்றிலும் பூமியே குளிர்ச்சியடைந்து விட்டது. அப்பொழுது ஹெர்க்குலிஸ் ஆற்றில் இறங்கி, அணையை, அகற்றிவிட்டு, கரையை நன்றாக அடைத்து. நீர் முன்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/44&oldid=1074315" இலிருந்து மீள்விக்கப்பட்டது