பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. கிரீட் தீவின் காளையைக் கைப்பற்றுதல்

கிரீட் தீவிலே அட்டகாசம் செய்து சுற்றிக் கொண்டிருந்த வெறி பிடித்த காளை ஒன்றைப் பிடித்துக்கொண்டு வர வேண்டுமென்று யூரிஸ்தியஸ் ஹர்க்குலிஸுக்குக் கட்டளையிட்டான். இது அவனுடைய ஏழாவது பணி.


அந்தக் காலத்தில் அத்தீவை ஆண்டுகொண்டிருந்த மன்னன். மினோஸ் என்பவன். அவன் பட்டத்திற்கு வந்த சமயத்தில் சீயஸ் கடவுளுக்கு ஒரு விலங்கைப் பலி கொடுக்க வேண்டுமென்று கருதி, கடற்கரையில் கற்களால் ஒரு பலிபிடத்தைக் கட்டினான். பின்னர்ச் சமுத்திர ராஜனான போசைடானைத் தொழுது, தேவதேவனுக்கு ஏற்ற ஒரு மிருகத்தைத் தனக்குக் கொடுத்தருள வேண்டுமென்று அவன் பிரார்த்தனை செய்தான். அதன்படி கடலரசனின் அருளால், நடுக்கடலிலிருந்து துாய வெண்மையான அழகுள்ள காளை ஒன்று துள்ளி வெளி வந்தது. அதன் கொம்புகள் குட்டையாயும், வெள்ளியால் அமைந்தவையாயும் இருந்தன. பால் போன்ற நிறம், பனி போன்ற குளிர்ந்த பார்வை. சுழி எதுவுமின்றிக் கம்பீரமான தோற்றம், ஆடு போன்ற அமைதியான குணம் ஆகியவற்றுடன் விளங்கிய அந்தக் காளையைக் கண்டவர் அனைவரும் பாராட்டினர். உலகிலேயே அதைப் போன்ற அழகுள்ள மாடு வேறு இல்லையென்று சொல்லலாம். அத்தகைய காளையை அதற்கு முன் மினோஸ் மன்னனும் கண்டதேயில்லை. ஆகவே, அவன் அதைப் பலியிட விரும்பாமல், அதைத் தன் புல் தரைகளிலே மேயவிட்டுவிட்டு, சியஸுக்குச் சாதாரனமான ஒரு காளையைப் பலியிட ஏற்பாடு செய்தான்.


தெய்வங்களை ஏமாற்ற முடியுமா ? மினோஸ் மன்னன் சீயஸ் கடவுளின் பெயரைச் சொல்லி வாங்கிய காளையைத் தானே வைத்துக்கொண்டதை அறிந்த கடலரசன், மிகுந்த கோபமடைந்து, அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/50&oldid=1033805" இலிருந்து மீள்விக்கப்பட்டது