பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

ஹெர்க்குலிஸ்


ஹெர்க்குலிஸும் அவனுடைய தோழர்களும் கோட்டைக் காவலர்களை எதிர்த்து வென்று. கோட்டைக்குள்ளே சென்று குதிரைகளைக் கண்டார்கள். குதிரைகள் மிகப்பெரியவையாக இருந்தபோதிலும், அவை மெலிந்திருந்தமையால், அவற்றின் எலும்புகள் எல்லாம் வெளியே தெரிந்துகொண்டிருந்தன. ஹெர்க்குலிஸும் வீரர்களும் ஆளுக்கு ஒரு கதையும், சுருக்கிடக் கூடிய நீண்ட கயிறும் வைத்திருந்தனர். அவர்கள் முதலில் குதிரைகளின் சங்கிலிகளைக் கழற்றிவிட்டனர். உடனே அவை அவர்கள்மீதே பாயத் தொடங்கின. ஆயினும், கதைகளின் அடிகளைத் தாங்கமுடியாமல், அவை எளிதில் அடங்கிவிட்டன. வீரர்கள், தாங்கள் தயாராக வைத்திருந்த கயிறுகளைக் கொண்டு, நான்கு குதிரைகளையும் கட்டி வெளியே கொண்டுசென்றனர்.

தயோமிடிஸும். அவனுடைய போர் வீரர் சிலரும், அந்த நேரத்தில் திடீரென்று அங்கே வந்து அவர்களை எதிர்க்க முற்பட்டனர். மன்னன், ஹெர்க்குலிஸின் வல்லமையை உனராமல், முதலில் அவனைப் பிடித்துத் தன் குதிரைகளுக்கு இரையாகப் போட வேண்டுமென்று விரும்பியிருந்தான். ஆனால், கிரேக்க வீரர்கள் அதிகச் சிரமப்படாமலே அவனுடன் வந்த படைவீரர்களை விரட்டியடித்துவிட்டு மன்னனைப் பிடித்துக் கட்டி வைத்தனர்.

தயோமிடிஸ் இளவயதினன் : உடல் வலிமையுள்ளவன்; ஆனால் கொடியவன். கயிறுகளால் கட்டப்பட்டிருந்த நிலையில் ஹெர்க்குலிஸ் அவனைக் கண்டான். அப்பொழுது நகரத்திலிருந்து சில மக்கள் அங்கே வந்து கூடியிருந்தனர். ஹெர்க்குலிஸ், மன்னனைத் தண்டிப்பதற்கு முன்னால், மக்களை பார்த்து, ‘இந்தக் கொடியவனுக்கு இரக்கம் காட்ட வேண்டுமென்று யாராவது விரும்புகிறீர்களா?’ என்று கேட்டான். எவரும் வாய் திறந்து பேசவேயில்லை. எவரும் அவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்க வேண்டுமென்று கேட்கவும் முன்வரவில்லை.


ஹெர்க்குலிஸ் மேலும் பேசத் தொடங்கினான்: தயோமிடிஸ் மற்ற மனிதர்களுக்கு எப்படி இரக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/54&oldid=1074318" இலிருந்து மீள்விக்கப்பட்டது