பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

51

காட்டி வந்தானோ, அதே முறையில் அவனுக்கும் இரக்கம் காட்ட வேண்டியது அவசியம். இவன் தன் குதிரைகளுக்கு இரையாக மனிதர்களைக் கோட்டைக்குள் தள்ளி வந்தான் என்று நான் இதுவரை கேள்விப்பட்டு வந்தேன். ஆனால், அது உண்மையாயிருக்குமா என்று என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மைதானா என்பதை நேரில் சோதனை செய்ய இப்பொழுது வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவனுடைய குதிரைகளிடம் இவனையே தள்ளிப் பார்ப்போம் ! அவை மனிதத் தசையைத் தின்னுகின்றனவா என்பதை நம் கண்களாலேயே பார்த்துவிடுவோம்!’


அவன் பேசி முடித்தவுடன், கிரேக்க விரர்கள் தியோமிடிஸைக் கட்டவிழ்த்துக் குதிரைகளின் பக்கமாகத் தள்ளிவிட்டார்கள். அவனைக் கண்டதும் குதிசைகள் நான்கும் அவனைச் சுற்றி வட்டமாக


நின்று நாட்டியமாடுவன போல், துள்ளிக் குதித்தன. உடனே உரக்கக் கனைத்துக்கொண்டு. அவை கால்களின் குளம்புகளால் அவனைக் கீழே தள்ளிச் சவட்டத் தொடங்கின. அன்று தமக்கு நல்ல இரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/55&oldid=1074319" இலிருந்து மீள்விக்கப்பட்டது