பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

ஹெர்க்குலிஸ்


ஹெர்க்குலிஸின் காலத்தில் அமெசான்கள் தெர்மோடோன் நதிக்கரையில் மூன்று பெரிய நகரங்களை அமைத்துக்கொண்டிருந்தார்கள். அம்மூன்று நகரங்களிலும் மூன்று அரசிகள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களுள் முக்கியமானவள் ஹிப்போலிதை என்பவள். அவள் தன் இடையில் நவரத்தினங்கள் பதித்த ஒட்டியாணம் ஒன்றை எப்பொழுதும் அணிந்திருந்தாள். அந்த ஒட்டியாணத்தைக் கொண்டுவர வேண்டுமென்று யூரிஸ்தியஸ் கட்டளையிட்டிருந்தான். அந்த ஒன்பதாவது பணியை நிறைவேற்றுவது ஹெர்க்குலிஸின் கடமையாயிற்று.

அவன் அயோலஸையும், மற்றும் பல தோழர்களையும் அழைத்துக்கொண்டு, கப்பலில் ஏறிச்சென்று. சாகேசிய மலைகளை அடைந்தான். அங்கே இராணி ஹிப்போலிதையின் ஒட்டியாணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்புவது எப்படியென்று அவன் ஆலோசனை செய்தான். அவன் எப்பொழுதும், எதற்கெடுத்தாலும் போரே செய்வான் என்று யூரிஸ்தியஸ் எண்ணியிருந்தான். அமெசான்களின் அரசியிடமும் அவன் போராடத் தொடங்கி, அவளிடமிருந்து மீள முடியாமல் அழிந்துவிடுவான் என்பது அவன் நம்பிக்கை.

ஆனால், ஹெர்க்குலிஸிடம் வேறு பல அரிய குணங்களும் அமைந்திருந்தன என்பது அவனுக்குப் புலப்படவில்லை. அமெசான் நாட்டில் ஹெர்க்குலிஸ் போர் செய்ய விரும்பவில்லை. போரிடாமலே தன் இலட்சியத்தை அடைய வேண்டும் என்று அவன் எண்ணினான். ஆண்களிலே அவன் அழகு மிகுந்தவன். அவன் உயர்ந்த உள்ளம் படைத்தவன்; நீதியிலும் நேர்மையிலும் ஆர்வமுள்ளவன். மாலை நேரங்களில் அவனுடன் உட்கார்ந்து அவனுடைய இனிய பேச்சையும், கதைகளையும் கேட்பதானால், பொழுது செல்வதே தெரியாது. மேலும், யாழ் வாசிப்பதிலும், இசை பாடுவதிலும் அவன் நிபுணன். பெண்களைக் கவர்ச்சி செய்வதற்கு இன்னும் வேறு என்ன வேண்டும்?


தெர்மோடோன் நதியில் கப்பலை நிறுத்திக் கொண்டு, ஹெர்க்குலிஸ் அமெசான்களின் விசித்திர-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/58&oldid=1233092" இலிருந்து மீள்விக்கப்பட்டது