பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

55

மான பழக்கவழக்கங்களைக் கவனித்துக்கொண்டிருந்தான். அவன் எத்தனையோ ஆச்சரியங்களைக் கண்டான். அமெசான்கள் நெடிய உருவத்துடன், வெண்மையான உடைகளணிந்து, ஒவ்வொருவரும் வில்லும் தூணியும் தாங்கிச் செல்வதை அவன் கண்டான். அவர்களுடைய வில்லாளர் படைக்கு அடுத்தபடி இரண்டாவது அணியாக விளங்கிய குதிரைப் படையினரைக் கண்டு, அவன் வியப்படைத்தான். அப்படையினர் ஈட்டியும் கேடயமும் தாங்கியிருந்தனர். அவர்களுடைய கேடயம் அரைச் சந்திர வடிவில் அமைந்திருந்தது. அமெசான்களின் தலைநகராகிய தெமிஸ்கிராவில் இறங்கி, ஹெர்க்குவிஸ் அவர்களுடைய வாழ்க்கை முறைகளை நேரிலே கண்டறிந்துகொண்டான்.

அவன் இராணி ஹிப்போலிதையைக் காணச் செல்லுமுன், அவளாகவே அவனுக்கு அழைப்பு அனுப்பினாள். அனைக் கண்டதுமே அவள் தன் அன்பைத் தெரிவித்து, அவனுக்குத் தன்னால் இயன்ற உதவியெல்லாம் செய்வதாகாகவும் கூறினாள். அவளுடைய கொலுமண்டபத்தில் மூன்று பக்கங்களில் வீரப் பெண்மணிகள் தங்கள் ஆயுதங்களுடன் பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்தனர். ஹிப்போலிதை பேரழகும் பெருந்ததிறலும பெற்று விளங்கினான். அவள், கொஞ்சம் செருக்குடையவள் எனினும், ஹர்குலிஸைப் புன்னகையோடு வரவேற்று உபசரித்தாள். அவனுடைய வீரச் செயல்களைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருந்ததாகக் கூறி, அவள் அவனை மிகவும் பாராட்டினாள்.

அவனும் வெகுநேரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய அநுபவங்கள் சிலவற்றைக் கேட்டு அரசி மகிழ்ச்சியடைந்தாள். பேச்சின் இடையில் ஹெர்க்குலிஸ் தான் வந்த காரியத்தையும் அவளிடம் தெரிவித்தான். அதைக் கேட்டதும் அவள், ‘இதுவரை நீங்கள் போராடிப் போராடியே ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றி வந்திருக்கிறீர்கள். ஆனால், இந்தத் தடவை போராட்டமில்லாமலே வெற்றி பெற்றுவிட்டீர்கள் ! நானாகவே மனமுவந்து விலை மதிக்க வொண்ணாத என் ஒட்டியாணத்தை உங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/59&oldid=1074322" இலிருந்து மீள்விக்கப்பட்டது