பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

59


வழியில் பற்பல கஷ்டநஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டன. ஒரு சமயம், புயலால் பொற்கிண்ணம் மலை போன்ற அலைகளின் மீது தத்தளிக்க நேர்ந்தது. அப்பொழுது கடலரசன் மீதே அம்பு தொடுக்க முற்பட்டான் ஹெர்க்குலிஸ், அவ்வரசன் சிரித்துக்கொண்டே, அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பினான்.

ஆப்பிரிக்கவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலுள்ள ஒடுக்கமான கடல்வழியாகச் செல்லுகையில் ஹெர்க்குலிஸ் இரு கண்டங்களின் எல்லைகளிலும் இரண்டு கல் தாண்களைத் தன் நினைவுச் சின்னங்களாக நட்டுவிட்டுச் சென்றான்.

அவன் அபாஸ் மலையைக் கண்டதும், கரையில் இறங்கி அம்மலையில் ஏறிப் பார்த்தான். ஜிரியனுடைய ஆடுமாடுகள் எங்கெங்கு மேய்கின்றன என்பதை அவன் கவனித்துக் கொண்டிருக்கையில், அவ்வசுரனுடைய இரண்டு தலைகளுள்ள ஆர்திரஸ் என்ற முரட்டு நாய் அவன் மீது பாய்வதற்காக ஓடி வந்தது. அவன் உடனே தன் கதையை அதன் தலைகளைக் குறி வைத்து வீசினான். நாய் நசுங்கி வீழ்ந்துவிட்டது. அடுத்தாற்போல், அசுரனுடைய காவற்காரன் ஓடி வந்தான். அவனும் கதைக்கு இரையானான். பிறகு, ஹெர்க்குலிஸ், புல் தரைகளில் மேய்ந்துகொண்டிருந்த ஆடு மாடுகளை ஒன்றுசேர்த்து ஓட்டிக் கொண்டு வரச் சென்றான். அவனுடைய தோழர்கள் சிலரும் பல பக்கங்களுக்குச் சென்று. அவனுக்கு உதவியாகப் பணி செய்து வந்தனர்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, ஜிரியன் கோபாவேசத்துடன், தன் ஆறு கைகளிலும் ஆறு பெரிய கதைகளைத் துக்கிக்கொண்டு, ஹெர்க்குலிஸைத் தாக்க முன்வந்தான். அவனுடைய கண்களில் அனல் வீசிக்கொண்டிருந்தது. நாசிகளிலிருந்து புகை வந்தது. அவன் கிரேக்க மாவீரனைக் கண்டதும், அவனைப் போருக்கு அறைகூவி அழைத்தான். ஒரே சமயத்தில் ஆறு கதைகளுக்குத் தனியே நின்று பதில் சொல்ல வேண்டுமே என்று யோசித்து, ஹெர்க்குலிஸ் அவனுக்கு எதிராகப் பாயாமல், அவனுக்கு விலாப்புறத்தில் ஓடி நின்றுகொண்டு, தன்னிட-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/63&oldid=1033840" இலிருந்து மீள்விக்கப்பட்டது