பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

61

அரசர்கள் ஹெர்க்குலிஸின் உதவியை நாடியதால், அவன் அவர்களுக்காக அவர்களுடைய எதிரிகளை அடக்கி வெற்றி பெற்றான். இத்தாலியிலிருந்து ஒரு சமயம் அவன் வழி தவறி, வேறு திசையிலே சென்று விட்டான். வெகுதூரம் சென்ற பிறகுதான், அவன் அதைத் தெரிந்துகொண்டான்; பிறகு, மீண்டும் வந்த வழியே திரும்பிச் சென்று, சரியான பாதையை அறிந்து அவ்வழியே சென்றான்.

மந்தை மந்தையாகச் சிவப்பு நிறமுள்ள கால்நடைகளை ஓட்டிக் கொண்டு அவனும் அவன் தோழர்களும் மைசீனை அடைந்ததும் , மக்கள் ஆச்சரியமடைந்தனர். ஹெர்க்குலிஸ் அதுவரை நிறைவேற்றிய பணிகளையெல்லாம் நாடு முழுதுமே மக்கள் தெரிந்துகொண்டு பாராட்டிப் புகழ்ந்தார்கள். அவனுடைய ஆணைக்குப் பணிந்து தொண்டு புரிய ஆயிரக்கணக்கான வாலிப வீரர்கள் எப்பொழுதும் தயாராயிருந்தனர். மக்கள் அனைவரும் அவனைத் தேவனாகப் போற்றத் தொடங்கினர். அந்நிலையில் யூரிஸ்தியஸினால் எந்த நேரத்திலும் தனக்கு ஆபத்து விளையுமென்று அஞ்சி நடுங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/65&oldid=1233207" இலிருந்து மீள்விக்கப்பட்டது