பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

63


ஆனால், அட்லஸ் மலையும் அந்தத் தோட்டமும் எந்தத் திசையில் இருந்தன என்பது ஹெர்க்குலிஸுக்குத் தெரியவில்லை. அதனால் அவன் விஷயம் தெரிந்த எவரிடமாவது விசாரித்துத் தெரிந்துகொள்ள விரும்பினான். அதற்காக அவன் வடமேற்குத் திசையாக நடந்து சென்று இல்லிரிபாப் பிரதேசத்தின் வழியாகப் போ நதியை நோக்கிச் சென்றான். அந்த நதிக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த மோகினிகள் சிலர் நீரியஸ் என்ற பழைய கடல் தேவன் இருந்த இடத்தை அவனுக்குக் காண்பித்தார்கள். அவன் நீரியஸிடம் சென்று, அட்லஸ் மலைக்கு வழி கேட்டான். அத்தேவன் நெற்றியிலே குட்டையான இரு கொம்புகளையும், கடற் பாசிகளைப் போல் நீண்டு அடர்ந்து தொங்கிக்கொண்டிருந்த தாடி, மீசைகளையும் உடையவன். அவன் முதலில் முறையாகப் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால், பின்னர் . வல்லமை மிகுந்த ஹெர்க்குலிஸிடம் உண்மையைச் சொல்லிவிடுவதே மேல் என்று கருதி, அவன் விவாங்களையெல்லாம் தெரிவித்தான். மேலும், தங்க ஆப்பிள்களை ஹெர்க்குலிஸ் தானே பறிக்காமல், அட்லஸின் மூலம் பெற்றுக்கொள்வது மேலென்றும் அவன் ஆலோசனை சொன்னான்.


அட்லஸ் மலை ஆப்பிரிக்க, கண்டத்திலிருந்தது. அதன்மேலேதான் அட்லஸ் என்ற அசுரன் வான மண்டலத்தைத் தன் தோள்களின் மீது சுமந்து நின்று கொண்டிருந்தான். தேவர்கள் அவனுக்கு விரோதமாயிருந்ததால், அவன் பல்லாண்டு பல்லாண்டாக வானத்தைச் சுமக்க வேண்டுமென்று விதித்திருந்தார்கள்.


ஹெர்க்குலிஸ் பல இடங்களைச் சுற்றிக்கொண்டு, ஆப்பிரிக்காவை அடைந்து, அட்லஸ் மலையைக் கண்டு, அதன் மீது ஏறிச் சென்றான். அதன் உச்சியில் அட்லஸ் தன் பெரும் பாரத்தைச் சுமந்துகொண்டிருப்பதை அவன் கண்டான்: அவனிடம் ஹீராவின் தோட்டம் எங்கேயிருந்தது என்பதுபற்றிக் கேட்டான். அட்லஸ், அவன் வந்த விவரத்தைத் தெரிந்து கொண்டு, தானே போய் மூன்று தங்கக் கனிகளையும் கொணர்ந்து தருவதாகச் சொன்னான். ஆனால், நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/67&oldid=1034597" இலிருந்து மீள்விக்கப்பட்டது