பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ஹெர்க்குலிஸ்

போய்த் திரும்புகிறவரை, நீ இந்த வானத்தை உன் தோள்களின்மீது தாங்கிக்கொண்டிருக்க வேண்டும்!’ என்று அவனை அட்லஸ் கேட்டுக் கொண்டான். ஆனால், ஆப்பிள் மரத்திலிருந்த நாகத்தை ஹெர்க்குலிஸ் முதலாவதாகக் கொல்ல வேண்டியிருந்தது. ஆதலால், அவன், தோட்டத்தின் வெளியில் நின்று கொண்டே, தன் விஷ அம்புகளில் ஒன்றை அதன் மீது ஏவி, அதை வதைத்துவிட்டு, அட்லஸிடம் திரும்பிச் சென்றான். அட்லஸ் வானத்தை அவனுடைய பெருந்தோள்களில் வைத்துவிட்டுக் கனிகளைக் கொண்டுவரச் சென்றான்.


ஹீராவின் தோட்டத்தைக் காத்து வந்த மூன்று கன்னியரும் அட்லஸின் குமாரிகளே என்று சில கதைகளிலே கூறப்பட்டிருக்கிறது. அது எவ்வாறிருப்பினும், அவர்கள் அவனுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள்.

ஆதலால், அவர்களிடம் சொல்லி, அவன் ஆப்பிள் கனிகளை வாங்கி வந்தான். அவன் மூன்று கனிகளையும் ஹெர்க்குலிஸிடம் காட்டி, தானே யூரிஸ்தியஸிடம் சென்று அவைகளைக் கொடுத்துவிட்டு வருவதாயும், அதுவரை அவன் தன் சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பது நலமென்றும் சொன்னான். அவன் நெடுங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/68&oldid=1074325" இலிருந்து மீள்விக்கப்பட்டது