பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

65

காலமாக வான மண்டலத்தைச் சுமந்துகொண்டிருந்ததில் சலிப்படைந்திருந்தான். அதைத் தாங்கக் கூடிய வேறு ஒரு வீரன் வந்துவிட்டதால், அவன் மீது அச்சுமையை வைத்துவிட்டுத் தான் ஓடிவிட வேண்டுமென்பதே அவன் ஆசை. அவனுடைய உட்கருத்தை எப்படியோ யூகித்துக்கொண்ட ஹெர்க்குலிஸ் எதற்கும் நீ ஒரு கண நேரம் இதை வாங்கி வைத்துக் கொள்! இது என் தோளை அழுத்துகின்றது. நான் தோள்களின் மீது சும்மாடு கட்டி வைத்துக்கொண்டால் சற்று எளிதாயிருக்கும். அதற்குப் பின் நீ போய்வாலாம்! என்று சொன்னான்.


உடனே அட்லஸ் கைகளிலிருந்த தங்கக் கனிகள் மூன்றையும் கீழே வைத்துவிட்டு அவனிடமிருந்து வானத்தைத் தன் தோள்களிலே ஏற்றுக்கொண்டான். ஹெர்க் குலிஸ், அந்தக் கனிகளை எடுத்துக் கொண்டு, திரும்பிப் பாராமலே ஓடத் தொடங்கினான்.


அவன் நேராகத் தாய்நாடு திரும்பாமல், ஆப்பிரிக்காவில் சில பிரதேசங்களைச் சுற்றிக் கொண்டு வந்தான். அப்பொழுது லிபியாவை ஆண்டுகொண்டிருந்த ஆன்டியஸ் மன்னன் அவனை மல்யுத்தத்திற்கு அழைத்தான். மாவீரனும் அதனை ஏற்றுக்கொண்டான். இந்த ஆன்டியஸ் சமுத்திர ராஜனுக்கும் பூமிதேவிக்கும் பிறந்தவன்; மிகுந்த வலிமை யுள்ளவன். லிபியாவுக்கு வரும் வெளிநாட்டவரை அவன் மற்போருக்கு அழைத்து அவர்களைக் களைப்படையச் செய்து, கடைசியாக வதைத்துவிடுவது வழக்கம் . அப்படி மடிந்தவர்களுடைய மண்டை ஓடுகளை அவன் சேர்த்து வைத்திருந்தான். தன் தந்தையாகிய கடலரசனுக்கு ஆலயம் அமைத்து. அதற்கு மேற்கூரையாக அந்த ஓடுகளை அடுக்க வேண்டும் என்பது அவன் விருப்பம்.


அவனை நெடுங்காலமாக எவரும் வெல்ல முடியவில்லை. அவன் அசகாய சூரன் என்று பெயர் பெற்றிருந்தான். உண்மை என்னவென்றால், அவன் பூமி தேவியின் புத்திரனாயிருந்ததால், அவளுடைய அருளால் அவன் அளவற்ற ஆற்றல் பெற்று வந்தான். அவன் பூமி மீது நின்றுகொண்டிருந்தால், அவனை

ஹெர் - 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/69&oldid=1034601" இலிருந்து மீள்விக்கப்பட்டது