பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ஹெர்க்குலிஸ்

எவரும் வதைக்க முடியாது. அவனுடைய உடலின் உறுப்புகள் பூமியைத் தீண்டுந்தோறும், அவை மேலும் மேலும் செழுமை பெற்று, வலுவடைந்துவந்தன. இரவு நேரத்தில் அவன் வெறும் தரை மேலேயே படுப்பது வழக்கம். அவனுடைய வலியை முழுதும் மண்ணின் சம்பந்தத்திலேயே இருந்தது. சிங்கங்களின் இறைச்சியையே அவன் உணவாக அருந்தி வந்தான். ஹெர்க்குலிஸைப் போலவே அவனும் சிம்மத் தோலையே ஆடையாகப் போர்த்தியிருந்தான் . இந்த விவரமெல்லாம் முதலில் ஹெர்க்குலிஸுக்குத் தெரியாது.

வீரர் இருவரும் மற்போருக்குத் தங்களைத் தயாரித்துக்கொண்டனர். இருவரும் தங்களுடைய தோலாடைகளைக் கழற்றிவிட்டனர். ஹெர்க்குலிஸ், கிரேக்க முறைப்படி, தன் உடலில் எண்ணெய் தடவித் தேய்த் துக்கொண்டான். அதற்கு மாறாக ஆன்டியஸ், சூடான மணலை அள்ளி வந்து அதைத் தன் உடல் முழுதும் தேய்த்துக்கொண்டன். ஒவ்வோர் உரோமக் காவிலும் மண்ணின் தொடர்பு இருக்க வேண்டும் என்பது அவன் ஆவல்.

போர் தொடங்கியவுடன், ஹெர்க்குலிஸ், முதலில் தன் கை வரிசைகளைக் காட்டாமல் ஆன்டியஸே தன்மீது பாய்ந்து விளையாட அநுமதித்தும் கொண்டிருந்தான். நெடுநேரத்திற்குப் பிறகு அவன்களைப் படைந்த நிலையில், அவனை எளிதில் விழத் தட்டிவிடலாம் என்பது அவன் எண்ணம். அவ்வாறே இறுதியாக அவன் ஆன்டியஸைக் கட்டிக் கீழே கிடத்தினான். ஆன்டியஸ் தரையிலே சாய்ந்ததும். அவனுடைய அங்கங்கள் விம்மிப் புதுமையாக உரம் பெற்று விளங்குவதை ஹெர்க்குலிஸ் கண்டான். பின்னாள் சில சமயங்களில், ஹெர்க்குலிஸ் பிடித்துத் தள்ளாத நிலையிலுங்கூட ஆன்டியள்ஸ் தானாகத் தரையிலே விழுந்தெழுவதையும் அவன் கவனித்தான். அப்பொழுதுதான் அவன் ஆன்டியஸுக்கும் மண்ணுக்கும் உரிய தொடர்பைப்பற்றித் தெரிந்துகொண்டான். எனவே, அவன், அம்மன்னனைக் கைகளால் தலைக்கு மேலே தூக்கி வைத்துக்கொண்டு, அவன் எலும்புகளை உடைத்து, அவன் முச்சு நிற்கும்வரை அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/70&oldid=1034602" இலிருந்து மீள்விக்கப்பட்டது