பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

69

அதில் இரும்புப் பாண்டங்கள் விழுந்தால் அவைகளைக்கூட உடைத்தெறியக் கூடிய ஆற்றல் அதற்கு இருந்ததாம். ஹெர்க்குலிஸ் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், ஆற்று நீரில் குதித்துப் பாதாள உலகிலுள்ள மாபெரும் ஏரியை அடைந்தான். அந்த ஏரியை அங்கிருந்த ஓர் ஓடத்தில் கடந்து செல்ல வேண்டும். அந்த ஓடத்தைச் செலுத்தி வந்த கேரன் என்பவன், மாண்டு போனவர்களின் ஆவிகளை மட்டும் தன் ஓடத்தில் ஏற்றிச் செல்லலாம் என்பது புளுட்டோவின் உத்தரவு. வெள்ளைக்குன்று போல் நிமிர்ந்து உயிரோடு நின்றுகொண்டிருந்த ஹெர்க்குலிஸைக் கண்டு, அவன் திடுக்கிட்டான். ‘யார் ஐயா, நீர்? என் ஓடம் இறந்தவர்களுக்கு மட்டும் உரியது!’ என்று அவன் மாவீரனை நோக்கிக் கூறினான்.


ஹெர்க்குலிஸ், ‘நீ என்னை ஓடத்தில் ஏற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும்! சீயஸ் கடவுளின் கட்டளைப்படி நான் இங்குள்ள செரிபரஸ் நாயை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறேன்!’ என்று சொன்னான்.


‘இங்கே வர அநுமதி பெறாத உம்மை நான் எப்படி ஏற்றிச் செல்ல முடியும்?’ என்று ஓடக்காரன் சீறினான்.


ஹெர்க்குலிஸ் ஒரே பாய்ச்சலாக ஓடத்திற்குத் தாவி, அதில் அமர்ந்துகொண்டு. ‘நீ ஒட்டுகிறாயா, இல்லையா? “ என்று உறுமினான்.


அவனுடைய பலத்தையும் உறுமலையும் மிடுக்கையும் கவனித்த கேரன், ஓடத்தை அக்கரை நோக்கிச் செலுத்தினான். புளுட்டோவின் கட்டடளையை மீறி அவன் இவ்வாறு ஓட்டியதற்காகப் பின்னால் ஓராண்டுச் சிறைத்தண்டனை அநுபவிக்க நேர்ந்தது. ஆயினும், அந்த நேரத்தில், ஹெர்குலிஸ் ஏரியைக் கடந்து விட்டான்.


பாதாள உலகிலிருந்த ஆவிகள் அவனைக் கண்டு வெருவி ஓடத் தொடங்கின. அவன் அவைகளுக்குத் திருப்தியுண்டாவதற்காக அங்கிருந்த மாடுகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/73&oldid=1074327" இலிருந்து மீள்விக்கப்பட்டது