பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

71

'அப்படியானால் செரிபாஸ் நாயை நீ கொண்டு செல்வதில் எனக்கு ஆட்சேபமில்லை. உன்னால் முடிந்தால், அதை பிடித்துக்கொண்டு போகலாம். ஆனால், விரைவிலே அதை நீ மீண்டும் இங்கே கொண்டுவந்துவிட வேண்டும்!’


இந்த உரையைக் கேட்டவுடன் ஹெர்க்குலிஸ் அவனையும் இராணியையும் வணங்கிவிட்டு, செரிபரஸ் நின்ற இடத்திற்குச் சென்றான, அது தன் மூன்று வாய்களாலும் பலமாகக் குரைக்கத் தொடங்கிற்று. அலன் தன் கை வலிமையை அதற்குச் சிறிதளவு காட்டி, அதைப் பிடித்து இழுத்துக்கொண்டு, பாதளத்தை விட்டு வெளியேறிச் சென்றான்.



செரிபரஸ் கதிரொளியையே அதுவரை கண்டதில்லை. கதிரொளியில் அதை எவரும் பார்த்ததுமில்லை. யூரிஸ்தியஸ் அதன் கோரமான உடலையும், மூன்று தலைகளையும், பாம்பு- வாலையும் பார்த்தவுடன், திகிலடைந்து, அதைத் திரும்ப யமலோகத்திற்கே கொண்டுசெல்லும்படி கூறினான். ஹெர்க்குலிஸ், செய்து முடிக்க வேண்டிய பணிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/75&oldid=1074329" இலிருந்து மீள்விக்கப்பட்டது