பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15. ஹெர்குலிஸ் தெய்வமாதல்


கிரீஸ் தேசத்தில் எல்லா ராஜ்ஜியங்களிலும், ஹெர்க்குலிஸின் புகழ் பரவி நின்றது. இனி அவன் யூரிஸ்தியஸ் மன்னனுக்கும். வேறு எவருக்கும் பணிகள் செய்ய வேண்டிய கடமையில்லை. அவன் சுதந்தரமாக வாழ்ந்து, பல அரசர்களுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த பல வனவிலங்குகளை அவன் வதைத்தான். அரசர்கள் போர்களுக்கும், திருடர்கள், கொள்ளைக்காரர்கள் முதலியவர்களை அடக்குவதற்கும் அவன் உதவியை அடிக்கடி நாடினார்கள். அவனும் தக்கவர்களுக்கெல்லாம் உதவி செய்து வந்தான். அவனுக்கு ஓய்வென்பதே இல்லை. போராட்டமே அவனுக்கு மூச்சுக் காற்றாக இருந்தது. அக்காலத்தில் அவன் தீப்ஸ் நகரிலே தங்கியிருந்தான்.


அவனுடைய புகழ் பெற்ற பன்னிரண்டு பணிகளுக்குப் பின்னாலும் அவன் மகத்தான வெற்றிகளைப் பெற்று வந்தான் : ஒரு சமயம் படைகளை அழைத்துக் கொண்டு, டிராய் நகரின் மீதுபடையெடுத்து அதைச் சூறையாடினான். ஆசியாவில் லிடியா என்ற நாட்டில் ஓராண்டுக்கு மேலாக அவன் தங்க வேண்டியிருந்தது. அப்பொழுது அந்நாட்டு இராணியான ஒம்பேல் என்பவளுக்கு அவன் பல உதவிகள் செய்து வந்தான். ஈலிஸ் நகரில் ஆஜியஸ் மன்னன் தன்னை முன்பு ஏமாற்றியதற்காக அவன் மீது ஒரு முறை படையெடுத்து, அவனை வதைத்து. அவனுடைய மகன் பைலியஸை ஹெர்க்குலிஸ் அரசனாக்கினான். ஆனால், அந்தப் போராட்டத்தில் அவனுடைய சகோதரன் இலிகிளிஸ் காயமடைந்து, அதனால் பின்பு ஆர்கேடிய நாட்டில் உயிர் துறக்க நேர்ந்தது.


ஹெர்க்குலிஸ் தன் பழைய மனைவி மிகாரை என்பவளை விலக்கிவிட்டு, ஓர் அரச குமாரியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/77&oldid=1034963" இலிருந்து மீள்விக்கப்பட்டது