பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ஹெர்க்குலிஸ்

தியனைராவை மணந்துகொள்ள விரும்பினான். அவளுடைய தந்தை அவனைப் பார்த்து, ‘உன்னை மணந்துகொள்வதால் என்மகளுக்கு என்ன கிடைக்கும்?’ என்று கேட்டான். உடனே அவன், ‘சீயஸ் தேவனின் மருமகள் என்ற பட்டம் கிடைக்கும்; உலகெங்கும் பரவியுள்ள என் புகழின் ஒளியில் அவள் வாழலாம்!’ என்று கணீரென்று மறுமொழி கூறினான். அவன், வில்வித்தையில் தன் ஆற்றலைக் காட்டி, போட்டிக்கு வந்த மன்னர்களையும் வீரர்களையும் வென்று, கடைசியில் தியனைராவை அடைந்தான்.


அவன் அவளை அழைத்துக் கொண்டு திரும்பும் வழியில், வெள்ளம் மிகுந்திருந்த ஓர் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் சென்டார் ஒருவன் வேகமாகப் பாய்ந்து கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். சென்டார் வகுப்பினருக்கு தலையிலிருந்து இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே நான்கு கால்களும் குதிரையின் உடலும் அமைந்திருக்கும். ஹெர்க்குலிஸைக் கண்ட சென்டார், தான் தியானராவைத் தன் முதுகில் அக்கரைக்குக் கொண்டு சேர்ப்பதாயும், அவன் தனியே நீந்தி வரலா மென்றும் தெரிவித்தான். வீரனும் அதற்குச் சம்மதித்தான். எல்லோரும் அக்கரையை அடைந்தனர்.


அங்கே சென்றதும் சென்டார், தியனைராவைச் சுமந்து கொண்டே, நாற்கால் பாய்ச்சலில் ஓடத் தொடங்கினான், அவனுடைய கபட நோக்கத்தை உணர்ந்துகொண்டான் ஹெர்க்குலிஸ். தியனைராவைக் கடத்திச் செல்லவே அவன் வந்திருந்தான். ஆகவே, நேரத்தை வீணாக்காமல், ஹெர்க்குலிஸ் தன் விஷ பாணங்களில் ஒன்றை அவன் மீது ஏவினான். அந்தக்கணத்திலேயே சென்டார் சுருண்டு வீழ்ந்துவிட்டான். அவன் உடல் முழுதும் லெர்னா வனத்து நாகத்தின் விஷம் பரவிவிட்டது. அவன் விஷம் கலந்த தன் உதிரத்தில் தோய்த்த ஒரு மருந்தைத் தியமைனராவிடம் கொடுத்து, அகதை ஹெர்க்குலிஸின் ஆடையில் தடவி, அவ்வாடையை அவன் அணிந்து கொள்ளும்படி செய்தால், அவளிடம் அவனுடைய அன்பு நிலைத் திருக்குமென்று கூறிவிட்டு, உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/78&oldid=1074330" இலிருந்து மீள்விக்கப்பட்டது