பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

79

யிருந்தவர் எவருக்கும் தீ முட்ட மனம் வரவில்லை. அப்பொழுதும் ஹெர்க்குலிஸ், மாலையணிந்து கொண்டு விருந்துக்கு வருபவனைப் போல, இன்பமாகவே விளங்கினான். வீரம் தாண்டவமாடும் அவன் முகங்களை மாறவில்லை.


அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த ஆயன் ஒருவன், தன் மகனை அழைத்து. ஹெர்க்குவிஸ் விரும்புவது போலச் செய்யும்படி கூறினான். அந்த இளைஞன் அவ்வாறே காட்டத்திற்குத் தீ மூட்டினான் அவனுக்குப் பரிசாக ஹெர்க்குலிஸ் தன் வில்லையும், அம்புகளையும். துணியையும் கொடுத்து, அவனைப் பாட்டினான். பிறகு அவன் சிம்மத் தோலைக் காட்டத்தின்மீது விரித்து தன் கதையைத் தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு, தோலின் மீது படுத்துக்கொண்டான்.


அந்த நேரத்தில் ‘சீயஸ் கடவுளின் ஆணையால், இடிகளும் மின்னல்களும் தோன்றின. காட்டம் ஒரு

கனத்திலே சாம்பலாகக் காணப்பெற்து. பாம்பு சட்டையைக் கழற்றுவது போல ஹெர்க்குலிஸ் தன் பழைய உடலைக் கழிற்றிவிட்டு, தேசோமயமான தெய்வீகச் சரீரத்துடன் மேலே எழுந்து சென்றான். சீயஸ் கடவுளே தன் நான்கு குதிரைகள் பூட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/83&oldid=1074332" இலிருந்து மீள்விக்கப்பட்டது