பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

"கரும்பு ரசமே - என் கசக்காத முக்கனியே! அரும்பா மலர்மணமே அறுமுகனே கண் வளராய்" 69 -என அன்னை தாலாட்டுகின்றாள். தவழ்ந்து வரும் தென்றல், “ஒளிர் நறு மலரின் ஊடே மணத்தினை உண்டு" 70 வருவதைப் பாவேந்தர் பாரதி தாசனார் பார்த்தார். இவர் பார்த்த தென்றல், பாரதியார் பார்வையில், "நறுமலரின் கமழைத் தென்றல் பொன்னங்க மணிமடவார் மாடமீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீசு"71 கிறது கீதையின் ஆசிரியன், "மலர் விரிந்து மணத்தைக் காற்று எடுத்துப்போவது போன்று, உயிர் உடல் எடுக்கும்போதும் விடும்போதும் பொறிகளைப் பற்றிக் கொண்டு போகின்றான்"72 என்றான். உயிரோடு ஒட்டிக் காற்றுக்கு மணமேற்றுகின்றான். இது தத்துவ மணம். இதுபோன்று மற்றொரு தத்துவம் : செய்யப்பட்ட வினை வெளிப்படும் முன் ஏற்படும் முன்னறி விப்பை "ஏது நிகழ்ச்சி” என்று புத்த மதம் குறிக்கும். இதன்படி மணிமேகலைக்கு ஒர் ஏது நிகழ்ச்சி எதிர்வந்தது. எப்படி? "மாமலர் நாற்றம் போல் மணி மேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது" 73 உள்ளத்தைச் சுற்றிவிடும் தத்துவத்தின் மணம் உலா வருவதைக் காட்டினேன். எண்ணத்தை ஊடறுத்து இன்பம் ஊட்டுவது இசை. காதுவழி இனிமை வழங்குவது இசை, அதனை மூக்காலும் நுகரச் செய்வது எனது மணம். இசைத் தமிழ் ஏழு உறுப்புகளைக் கொண்டது. ஒவ்வொரு உறுப்பிற்கும்

69 நாட்டுத் தாலாட்டு, 72 பக. கீ. அத், 15: 8. 70 அழ. சி : தென்றல் 8. 73 மணி : மலர்வனம் : 3-4, 71 பாஞ்.ச 17 -