பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

81 எனது மென்மைக்கு மற்றுமொரு முத்திரை : இதுவரை கண்டவைபோன்று உடல் மென்மைக்கும் தன்மை மென்மைக்கும் மட்டுமல்லாமல் உணர்வு மென்மையும் எனது மென்மையால் புலப்படுத்தப்படும். 'காமம்’ என்னுஞ் சொல் இக்காலத்தில் 'காதல் வெறி' என வன்மையுடையது போன்று வழக்காகியுள்ளது. ஆனால், உணர்வுகளில் மெல்லியது காம உணர்வு. திருவள்ளுவர் 'மெல்லிது காமம்’ என்றார். எந்த அள்வு மெல்லிது என்று அளவிட்டார்: "மலரினும் மெல்லியது காமம்’88 -என மென்மையான காம உணர்விற்கு எனது மென்மையைக் காட்டியது எனது மென்மைக்கு மங்களம் பாடியதாகும். மென்மை எனக்கே உரியது என்பதன் காரணம் யாது ? பரிமேலழகர் விடை தருகின்றார் : 'தொட்ட துணையானே மணச்செவ்வி அழிவதால் மலர் எல்லாவற்றினும் மெல்லிது’ 84 ஒரு முனகல் கேட்கிறது : 'இலக்கியங்கள் "நின்னினும் மென்னிரல்" "மலரினும் மெல்லிது” என்றெல்லாம் உனது மென்மையைவிட மேம்பட்ட மென்மையாகக் குறிப்பதால் நீ அவற்றினும் குறைவுதான்' -என்னும் முணகல் அது.

மேலே காணப்பட்ட இலக்கியப் பேச்சுகள் யாவும் தோழியும் தலைவனும் தலைவிமேல் கொண்ட அன்புப் பெருக்காலும் காதல் கொப்பளிப்பாலும் அவளை உயர்த்திப் பேசும் ஆர்வ மொழிகள். உணர்வுப் பேச்சுகளால் உண்மையைத் திரையிடுதல் இயல்பு. ஆனால், உவமையாக உயர்ந்ததையே சொல்லுவர். "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை'85 என்றார் தொல்காப்பியர். எனவே, அளவுகோலாகவும் அதற்கேற்ற உவமை 83 குறள்:1289 84 குறள்:1289 வரை 85 தொல்:உவமவியல் 3

  • 6